ஜெய் பீம் படத்திலிருந்து அனைவருக்கும் ஒரு நடிகனாய் பரிச்சயமானவர் மணிகண்டன். மிகவும் கஷ்டப்பட்டு இன்று நல்ல ஒரு நிலைமையை அடைந்திருக்கிறார். நடிப்பையும் தாண்டி பல குரல்களில் பேசி மிமிக்கிரி செய்து அனைவரையும் கவர்ந்து விடுவார்.
சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர் என பல முகங்களை கொண்டவர் மணிகண்டன். இப்பொழுது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என இவர் நடிப்பில் படங்கள் வெளிவந்துள்ளது.
இயக்குனர் கார்த்திக் ராஜ், மணிகண்டன், விஜய் சேதுபதி, பாபி சிம்மா இவர்கள் எல்லாரும் ஒரு டீம். சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என எல்லா வேலைகளையும் பார்த்த மணிகண்டனுக்கு இப்பொழுது புதிதாய் ஒரு ஆசை துளிர் விட்டு உள்ளது. அதற்குண்டான அடியையும் இப்பொழுது எடுத்து வைத்துள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம். அவரிடம் தான் ரெடி பண்ணிய கதையையும் சொல்லியுள்ளார். கதை பிடித்து போனதால் விஜய் சேதுபதியும் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாக இருக்கிறது.
விக்ரம் வேதா, விசுவாசம் போன்ற படங்களுக்கு மணிகண்டன் தான் ஸ்கிரிப்ட் ரைட்டர்.இப்பொழுது இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். எப்பொழுதுமே விஜய் சேதுபதி நண்பர்களுக்காக தோள் கொடுப்பவர். இவரையும் வளர்ந்து விடுவதற்கு இப்பொழுது அஸ்திவாரம் போட்டுள்ளார்.