வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

குடும்பங்களை கொண்டாட வைத்ததா குடும்பஸ்தன்.? மணிகண்டனுக்கு வெற்றியா.? முழு விமர்சனம்

Kudumbasthan Movie Review: பல்வேறு திறமைகளோடு கவனம் பெற்றுள்ள மணிகண்டன் குட் நைட், லவ்வர் படங்கள் மூலம் வெற்றியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து இன்று அவரின் குடும்பஸ்தன் வெளியாகி உள்ளது.

ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, ஆர் சுந்தர்ராஜன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதைத்தொடர்ந்து பிரிவியூ ஷோவை பார்த்த பத்திரிக்கையாளர்களும் விமர்சகர்களும் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்திருந்தனர். இதுவே படத்திற்கு பெரும் பிரமோஷன் ஆக மாறியது.

அதைத்தொடர்ந்து இன்று தியேட்டருக்கு வந்திருக்கும் இப்படம் மணிகண்டனுக்கு வெற்றியா? குடும்பத்தோடு படத்தை பார்க்கலாமா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

முழு விமர்சனம்

மிடில் கிளாஸ் பையனாக இருக்கும் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்போது வேறு ஜாதியை சேர்ந்த ஹீரோயினை அவர் திருமணம் செய்து கொள்கிறார்.

இரு வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அதிகமான குடும்ப பொறுப்பு மணிகண்டன் கைக்கு வருகிறது.

அந்த சமயத்தில் வேலை போய் விட வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் மறைக்கிறார். அதே நேரத்தில் அக்கா கணவரான குரு சோமசுந்தரம் எப்ப சான்ஸ் கிடைக்கும் மணிகண்டனை மட்டம் தட்டலாம் என காத்திருக்கிறார்.

இந்த சூழலில் வீட்டு தேவைகளுக்காக கடன் வாங்கும் மணிகண்டன் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? இந்த நெருக்கடியில் இருந்து அவர் வெளிவந்தாரா? என்பதை கலாட்டாவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

எதார்த்தமான கதை தான் இது. அதிலும் திருமணமான இளைஞன் படும் கஷ்டம் சீரியஸான கதை களம் தான். ஆனால் அதை நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பக்கத்து வீட்டு பையன் போன்ற எதார்த்தமான நடிப்புடன் மணிகண்டன் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். கடன் வாங்கிவிட்டு தவிப்பதில் தொடங்கி எல்லாமே கலகலப்பு தான்.

ஒரு சில காட்சிகள் சீரியஸாக இருந்தாலும் மீண்டும் கதை கலகலப்பாக மாறிவிடுகிறது. இதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

முதல் பாதி ஜாலியாக சென்று நிலையில் இரண்டாம் பாதியில் சிறு தடுமாற்றம் இருக்கிறது. ஆனாலும் இந்த குடும்பஸ்தனை குடும்பத்தோடு தாராளமாக பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

Trending News