Kudumbasthan Trailer: எதார்த்தமான திரைகதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் உருவாகி இருக்கிறது. ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், சான்வி மேக்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் 24ஆம் தேதி வெளிவர உள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக மிடில் கிளாஸ் பையனின் எதார்த்தத்தை காட்டி இருக்கிறது இந்த வீடியோ.
ஆரம்பத்திலேயே ஒரு குரல் சந்தோஷமா இருக்கிற பையனை குடும்பஸ்தனாக மாற்றுவது எப்படி என ரெசிபி போல் ஆரம்பிக்கிறது.
குடும்பஸ்தன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
அதைத்தொடர்ந்து முதல்ல கல்யாணத்தை பண்ணி வைக்கலாம், ஊற வச்ச பொறுப்புகளை சேர்க்கலாம். நம்பிக்கைய கொஞ்சமா துவலாம் என காட்டப்படும் காட்சிகள் ஒவ்வொன்றும் எதார்த்தத்தின் பிரதிபலிப்பு.
அதேபோல் அவனை பொன் நிறமா வறுத்து எடுத்துக்கலாம். சுண்ட வச்சு இறக்குனா சுட சுட குடும்பஸ்தன் தயார் என முடிகிறது ட்ரெய்லர்.
இதில் மணிகண்டன் திருமணத்திற்கு பிறகு குடும்ப பொறுப்புகளை ஏற்பது கடன் வாங்கி கஷ்டப்படுவது என அசத்தி இருக்கிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எதார்த்தமான நடிப்புதான் இவருடைய பிளஸ்.
ஏற்கனவே இவரின் குட் நைட் ரசிகர்களை கவர்ந்த நிலையில் குடும்பஸ்தன் சரவெடியாக இருக்கும் என தெரிகிறது. நிஜ மிடில் கிளாஸ் ஆண்களின் காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் குடும்பஸ்தன் ட்ரைலர் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது.