ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன்.. 83 நாட்களுக்கு மொத்தமாக வாங்கிய சம்பளம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதி வார்த்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஷிவின், ரக்ஷிதா, மைனா நந்தினி, ஏடிகே, கதிரவன், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிக் பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேறினார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்ற மணிகண்டன் வெளியேறுகிறார். சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் ஆவார். இவர் பிக் பாஸில் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக விளையாடி இருந்தார்.

Also Read : யாரும் எதிர்பார்க்காத பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி.. டிஆர்பியை தக்க வைக்க மாஸ்டர் பிளான்

அதுமட்டுமின்றி பிக் பாஸ் வரலாற்றிலேயே நான்கு முறையாக தலைவர் பொறுப்பேற்றது மணிகண்டன் தான். இவர் இன்னும் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரமே வெளியேறுகிறார். இதுவரை 83 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் மணிகண்டன் பயணித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு நாளைக்கு பிக் பாஸ் வீட்டில் மணிகண்டனுக்கு 18 ஆயிரம் தொடங்கி 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மணிகண்டன் 16 லட்சத்து 60 ஆயிரத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மணிகண்டன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

Also Read : கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் வரவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி குடும்பங்கள் இணையும் டாஸ்க்கில் மணிகண்டனை பார்க்க அவரது அம்மா, மனைவி, மகன் ஆகியோருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரருக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.

இப்போது பிக் பாஸ் வீட்டில் ஆட்கள் குறைய குறைய ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வரை போட்டியாளர்கள் தங்களது சுயரூபத்தை காட்டாமல் விளையாடி வருகிறார்கள். ஆனால் வரும் வாரங்களில் போட்டிகள் கடுமையாக்கப்படுவதால் அவர்களின் திறமையை காண்பிக்க வாய்ப்பு உள்ளது.

Also Read : ஆடியன்ஸ் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்.. பிக் பாஸ் டைட்டில் இவருக்குத்தான்

Trending News