வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மணிரத்னம்.? பொன்னியின் செல்வன் முழு விமர்சனம்

பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவல் தற்போது மணிரத்தினத்தின் முயற்சியால் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. பலரின் கூட்டு முயற்சியில் நனவாகி இருக்கும் மணிரத்தினத்தின் இந்த கனவு திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு ஒரு விரிவான அலசலுடன் காண்போம்.

பொன்னியின் செல்வன் நாவலை படித்த பலருக்கும் இந்த கதை பற்றி முழுமையாக தெரிந்து இருக்கும். ஆனால் அதை பற்றி எதுவும் தெரியாத ரசிகர்களுக்கும் இந்த கதையை புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்பதுதான் மணிரத்தினத்தின் எண்ணம். அதை கொஞ்சம் கூட மிஸ் செய்யாமல் ரசிகர்களை சுவாரசியத்துடனும், பரபரப்புடனும் இறுதிவரை அமர வைத்திருப்பது தான் அவருடைய மேஜிக்.

கதைப்படி ஆதித்த கரிகாலனின் நண்பனாக இருக்கும் வந்தியத்தேவன் முக்கியமான இரண்டு ஓலைகளை எடுத்துக்கொண்டு தஞ்சை நோக்கி புறப்படுகிறார். அங்கு அவர் ஆழ்வார்கடியான் நம்பியை சந்திக்கிறார். அதன் பிறகு அவர் தன் நண்பனின் அரண்மனைக்கு செல்லும்போது அங்கு சசோழ சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடக்கும் சதித்திட்டங்களை அறிந்து கொள்கிறார்.

Also read : பிரம்மாண்டத்தை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. தீயாக பரவும் ட்விட்டர் விமர்சனம்

சோழ மன்னன் சுந்தர சோழருக்கு அடுத்து முடி சூட்டப்பட வேண்டியவர் ஆதித்த கரிகாலன். ஆனால் சுந்தரர் சோழரின் சகோதரர் மதுராந்தகன் அந்த சிம்மாசனத்திற்கு ஆசைப்படுகிறார். இதற்காகவே காத்திருக்கும் பெரிய பழுவேட்டரையர் உட்பட பலர் இந்த சதிக்காக ஒன்று கூடுகிறார்கள்.

இவர் கிடையில் 60 வயதான பழுவேட்டரையரை இளம் பெண் நந்தினி திருமணம் செய்து கொள்கிறார். உண்மையில் நந்தினி தன் காதலன் வீரபாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்வதற்கு தான் இப்படி ஒரு திருமணத்தை செய்து கொண்டு தஞ்சாவூருக்கு வருகிறார். நந்தினிக்கும், ஆதித்த கரிகாலனுக்கும் இடையே சிறு வயது காதலும் இருக்கிறது.

அவருடைய பழிவாங்கும் படலத்திற்கு பாண்டிய தேசத்தின் ஆபத்துதவிகள் உடந்தையாக இருக்கின்றனர். இப்படி சோழ சாம்ராஜ்யத்தை சுற்றி நடக்கும் சதிவலைகளை தெரிந்து கொண்ட குந்தவை வந்தியத்தேவன் மூலம் இலங்கை போரில் இருக்கும் தன் தம்பி அருண்மொழிவர்மனை தஞ்சைக்கு வர செய்கிறார்.

மேலும் தன் சகோதரர் ஆதித்த கரிகாலனை அழைத்து வருவதற்காக குந்தவை நேரடியாக காஞ்சிக்கு செல்கிறார். இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் கதைக்களத்தில் நந்தினியின் திட்டம் நிறைவேறியதா, ஆதித்த கரிகாலனுக்கு என்ன நடந்தது, அருண்மொழிவர்மன் தஞ்சை திரும்பினாரா போன்ற பல ட்விஸ்ட்களுடன் முதல் பாகம் முடிகிறது.

Also read : இணையதளத்தை அலறவிட்ட மணிரத்னம்.. கதிகலங்கி போய் இருக்கும் நபர்கள்

சொல்ல வந்த கதையை தெளிவாகவும் ரசிகர்களுக்கு புரியும் படியும் கொடுத்திருப்பதே படத்திற்கான பக்க பலமாக இருக்கிறது. தேவையில்லாமல் ஆடியன்ஸை ஏமாற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் போன்ற எதுவும் இல்லை. ஏ ஆர் ரகுமானின் இசையும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மணிரத்னம் மிகச்சரியாக தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் பொன்னியின் செல்வனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்துவாரா என்ற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதை சுக்குநூறாக்கும் விதத்தில் அவருடைய நடிப்பு இருக்கிறது.

இப்படி படத்தில் நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் விக்ரம் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மிகப்பெரிய நாவல் கதையை முடிந்த அளவு சுருக்கி கொடுக்க வேண்டும் என்ற வேகம் திரையில் தெரிகிறது. அதிலும் சில காட்சிகள் நாவலில் படித்ததை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதும் நெருடலை கொடுக்கிறது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் புதிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.

சினிமா பேட்டை ரேட்டிங்: 4/5

Also read : மணிரத்னத்தின் அசைக்கமுடியாத 8 படங்கள்.. ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டும் பொன்னியின் செல்வன்

Trending News