புதன்கிழமை, ஜனவரி 29, 2025

தனித்துவமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள்.. இளம் ஹீரோக்களுக்கு கொடுத்த அந்த மூன்று ஹிட்

Maniratnam Movies: தமிழ் திரையுலகில் மூத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். அவரின் இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு திரும்பித் திரும்பிப் பார்க்க தூண்டும் வகையில், இவரின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட எவெர்க்ரீன் திரைப்படங்கள் 6 பற்றி பார்ப்போம். மறக்குமா நெஞ்சம் எனும் அளவிற்கு, என்றும் மனதில் நிற்கும் மணிரத்னம் திரைக்காவியம்.

இருவர்: 1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் திரைப்படம் அரசியல் சார்ந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மு. கருணாநிதி, எம் ஜி ராமச்சந்திரன், ஜெ ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களின் ஆரம்ப கால வாழ்க்கையை கருவாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு , நாசர் போன்ற முன்னணி பிரபலங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தயாரிக்கப்பட்ட படமாகும்.

Also Read:650 கோடி வசூல் செய்தாலும் ரஜினியுடன் கூட்டணி சேர மாட்டேன்.. லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு

நேருக்கு நேர்: வசந்த் இயக்கத்தில் உருவான நேருக்கு நேர் திரைப்படம் ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியானது. இதில் திரை உலகின் ஜாம்பவான்கள் ஆகிய விஜய், சூர்யா, சிம்ரன், ரகுவரன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். திரைப்படத்தின் முக்கிய கதை கணவன், மனைவிக்கு துரோகம் செய்ததை சொல்லுகிறான். அதை தாங்க முடியாமல் மனைவி அவனை விட்டு பிரிந்து செல்கிறார். குழந்தையும் தன்னோடு கூட்டிக்கொண்டு செல்கிறார், பிறகு எப்படி இவர்கள் சேருகிறார்கள் என்பதே மையக் கருத்தாகும்.

அலைபாயுதே: மாதவன் ஷாலினி இணைந்து நடித்த அலைபாயுதே ரொமான்டிக் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் மாதவனும் காதலி ஷாலினியும் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வார்கள். பிறகு அதனைபற்றி வீட்டிற்கு தெரிய வரும்போது, இருவரும் ஒன்றாக வாழ தொடங்குவார்கள். அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில், பிரிந்து எப்படி சேர்கிறார்கள் என்பதே மையக் கருத்தாகும். ஒரு விஷயம் நம்மளுடையதாக இருந்தா அது எப்பவுமே நம்மளுக்காக இருக்கும், என்ற லைனுக்கு ஏத்தபடி இந்த கதை அமைந்திருக்கும்.

Also Read:மொத்த வெறுப்பையும் சம்பாதித்த பாகிஸ்தான் வீரர்.. வெறி பிடித்து திரியும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா

கன்னத்தில் முத்தமிட்டால்: 2002இல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமும் இன்றளவிலும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு அமைந்திருக்கும். இத்திரைப்படத்தில் மாதவன், சிம்ரன், கீர்த்தனா, பிரகாஷ்ராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஸ்ரீலங்காவில் போர் நடக்கும் சமயத்தில் பெண் ஒருவர் ராணுவ வீரால் கர்ப்பம் ஆகிவிடுவார். பிறகு அந்தப் பெண் இந்தியாவிற்கு வரும் போது குழந்தை பிறந்துவிடும். குழந்தையை இங்கேயே விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு சென்று விடுவாள். குழந்தை எடுத்து ஒரு தம்பதியினர் வளர்ப்பார்கள், குழந்தையின் ஒன்பது வயதில் போது உண்மையை சொல்வார்கள். குழந்தை அவள் குடும்பத்தை பற்றி கேட்பாள், எப்படி குழந்தை தன்னை பற்றி தெரிந்து கொள்கிறாள் என்பதே படத்தின் கதையாகும்.

ஓ காதல் கண்மணி: ஓ காதல் கண்மணி காதல் ரொமான்டிக் காதல் திரைப்படமாகும். இதில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்கள். பிறகு திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பதே இப்படத்தின் கதையாகும்.

Also Read:ரத்தக்கரையுடன் இருக்கவே ஆசைப்படும் கமல்.. மொத்தமாக மாற்றி வைத்திருக்கும் லோகேஷ்

பொன்னியின் செல்வன்: காவிய திரைப்படமாகிய பொன்னியின் செல்வன் இதில் இடம்பெறுகிறது. திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும். இது ஒரு வரலாறு கதையை மையமாக கொண்டு தழுவி எடுக்கப்பட்ட கற்பனை திரைப்படமாகும். திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் திரும்பத் திரும்ப பார்க்தூண்டும் அளவிற்கு அமைந்திருக்கும்.

Trending News