புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எம்ஜிஆரின் கொள்கையை மாற்றிய மணிவண்ணன்.. சூட்டிங் ஸ்பாட்டில் உருவான புது ட்ரெண்ட்

அரசியல், சினிமா என்று இரண்டிலும் வெற்றிவாகை சூடிய எம்ஜிஆர், நடிக்கும் காலகட்டத்தில் சில கொள்கைகளுடன் தான் இருந்திருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் சில விஷயங்களில் ரொம்பவும் கண்டிப்பாக இருப்பாராம். அதில் முக்கியமான ஒரு விஷயம் தான் சூட்டிங் ஸ்பாட் கொள்கை.

அதாவது அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது எந்தவித ஆர்ப்பாட்டமும், சத்தமும் இல்லாமல் ரொம்ப அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். குண்டூசி விழுந்தால் கூட அதிரும் அளவுக்கு அப்படி ஒரு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் எம்ஜிஆர் விரும்பி இருக்கிறார்.

Also read:மணிவண்ணன் இயக்கத்தில் ஒரே நாளில் வெளிவந்த 2 சத்யராஜ் படங்கள்.. இரண்டுமே 100 நாட்களை தாண்டி சாதனை!

அதனாலேயே அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நேரத்தில் அனைவரும் ரொம்பவும் பயந்து பயந்து தான் இருப்பார்களாம். அங்கு எம்ஜிஆர் பேசும் சத்தத்தை விட வேறு எந்த சத்தமும் இருக்காதாம். அந்த அளவுக்கு அந்த இடம் சைலன்டாக இருக்குமாம்.

இந்தக் கொள்கையை எம்ஜிஆர் இறுதிவரை ஃபாலோ செய்து வந்திருக்கிறார். அவருக்கு ஏற்றார் போலவே இயக்குனர்களும் நடந்து கொள்வார்களாம். காலப்போக்கில் அவர் பின்பற்றி வந்த இந்த கொள்கை அடுத்தடுத்த தலைமுறைகளாலும் பின்பற்றப்பட்டது. அதாவது பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அந்த இடமே அமைதியாக தான் இருக்கும்.

Also read:மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 4 படங்கள்.. அதில் முதல் படம்தான் செம மாஸ்

அப்படி ஒரு விஷயத்தை உடைத்துக் காட்டிய பெருமை இயக்குனர் மணிவண்ணனை தான் சேரும். ஏனென்றால் அவர் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் தளமே பயங்கர கலகலப்புடன் இருக்குமாம். ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களை கவர்ந்த அவர் சிறந்த இயக்குனராகவும் இருந்தார் என்பது நம்மால் மறுக்க முடியாதது.

அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடி இருக்கிறது. இப்படி பெயரும், புகழும் இருந்தாலும் அவர் சக நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களுடன் ஜாலியாக பழகுவாராம். ஒரு இயக்குனர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் அவர் அனைவருடனும் கலகலப்புடன் பழகி அந்த இடத்தையே சந்தோஷமாக வைத்துக் கொள்வாராம். அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் புது ட்ரெண்டை உருவாக்கிய மணிவண்ணனின் பாணியை தற்போது பல இயக்குனர்களும் பின்பற்றி வருகின்றனர்.

Also read:எம்ஜிஆர், சிவாஜி விளையாட்டு வீரர்களாக நடித்த ஒரே படம்.. பிகிலுக்கு டப் கொடுத்த நடிகர் திலகம்

Trending News