மணிவண்ணனை ஒரு சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் இவர் பல வெற்றி படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர். மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் கூட்டணியில் பல காமெடி காட்சிகள் இன்று வரை ரசிக்கும் படி இருக்கின்றன. அந்த காமெடி எல்லாம் தாண்டி மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் 25 படங்களில் நடித்திருக்கிறார். அந்த 25 படங்களில் குறிப்பிட்ட ஆறு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமைதிப்படை : மணிவண்ணன்- சத்யராஜ் கூட்டணி என்றாலே நமக்கு முதலில் நினைவு வருவது அமைதிப்படை திரைப்படம் தான். இன்றைய அரசியலை அவ்வளவு எளிதாக நக்கலும், நையாண்டியும் கலந்து கொடுத்திருப்பார்கள் இவர்கள் இருவரும். தேங்காய் பொருக்கி தின்னும் அம்மாவாசை திடீரென நாகராஜசோழன் எம் எல் ஏ வாக மாறுவது எல்லாம் இன்று வரை ரசிக்கப்படும் காட்சியாகவே இருக்கிறது.
Also Read:மீண்டும் மணிவண்ணனை ஞாபகப்படுத்தும் நடிகர்.. சத்தமே இல்லாமல் ராஜாக்கிளி செய்யும் வேலை
மாமன் மகள் : சத்யராஜ், கவுண்டமணி, மனோரமா, மீனா என்ற அசத்தல் கூட்டணியில் உருவான படம் மாமன் மகள். இந்த படத்தில் மணிவண்ணனோடு சேர்ந்து, சத்யராஜ் மற்றும் கவுண்டமணி அடித்திருக்கும் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும். படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சின்ன தம்பி பெரிய தம்பி: 1985 ஆம் ஆண்டில் அன்றைய முன்னணி ஹீரோக்களான சத்யராஜ் மற்றும் பிரபுவை வைத்து மணிவண்ணன் இயக்கிய திரைப்படம்தான் சின்ன தம்பி பெரிய தம்பி. மேலும் இந்த படத்தில் நதியா மற்றும் சுதா சந்திரனும் நடித்திருந்தார்கள். இந்த படம் மணிவண்ணன் இயக்கத்தில் வந்தது என்று பலருக்கும் தெரியாது. எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்பவும் தைரியமாக மணிவண்ணன் இந்த படத்தில் விதவை திருமணத்தை பற்றி பேசி இருந்தார்.
Also Read:இயக்குனர்கள் வில்லனாக மாஸ் காட்டிய 5 படங்கள்.. அரசியல்வாதியாக மிரட்டிய மணிவண்ணன்
24 மணி நேரம்: மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படம் தான் 24 மணி நேரம். இந்த படத்தில் சத்யராஜ், நளினி, மோகன் மற்றும் ஜெய்சங்கர் நடித்திருக்கின்றனர். காட்சிக்கு காட்சி அடுத்தடுத்து சஸ்பென்சை கொண்ட கதைக்களம் இது. இதனாலேயே இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தெற்கு தெரு மச்சான் : 1992 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் பானுப்ரியா நடித்த திரைப்படம் தெற்கு தெரு மச்சான். முழுக்க முழுக்க கமர்சியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த படம். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். கிட்டத்தட்ட நூறு நாட்களைக் கடந்து இந்த படம் தியேட்டரில் ஓடியது.
புதுமனிதன்: மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கிய திரைப்படம் புது மனிதன். இந்த படத்தில் சத்யராஜ், கவுண்டமணி, பானுப்ரியா, சரத்குமார், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். அதிரடி ஆக்சன் காட்சிகளும் நகைச்சுவை காட்சிகளும் நிறைந்த இந்த படம் கமர்சியல் திரைப்படமாக வெளியானது. பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
Also Read:மணிவண்ணன் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.