சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இந்த கொசு தொல்லை தாங்கல, ஆஸ்கர் விருதே வேண்டாம்.! கூச்ச நாச்சமே இல்லாமல் உருட்டும் மஞ்சள் வீரன் இயக்குனர்

Manjal Veeran: நிறைகுடம் தழும்பாது ஆனால் குறைகுடம் கூத்தாடும். அப்படி ஒரு நிலையில் தான் மஞ்சள் வீரன் பட இயக்குனர் இருக்கிறார். யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் இப்போது பெரிய திரையில் ஹீரோவாக களம் காண இருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் வாசன் பிறந்த நாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு பட குழு பயங்கர அலப்பறை கொடுத்தது. அது மட்டுமல்லாமல் ஹீரோவாக நடிக்கும் வாசன் பத்திரிகையாளர்களிடம் 100வது நாள் வெற்றி விழா சந்திப்பில் உங்களை சந்திக்கிறேன் என்று ஓவராக அளந்து விட்டார்.

Also read: ஓவர் தலைக்கனத்தில் ஆடும் டிடிஎஃப் வாசன்.. அடுத்த ஸ்லீப்பிங் ஸ்டாருக்கு சொம்படிக்கும் திரையுலகம்

இதனால் ஒட்டு மொத்த ரசிகர்களும் அவரை விதவிதமாக கழுவி ஊற்றினார்கள். இந்நிலையில் மஞ்சள் வீரன் பட இயக்குனர் தன் பங்குக்கு ஒரு அட்ராசிட்டியை செய்திருக்கிறார். அதாவது இப்படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிச்சயம் 100 நாள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் கூட ஜீரணித்த ரசிகர்களால் அவர் அடுத்து சொன்ன விஷயத்தை தான் தாங்கவே முடியவில்லை. அதாவது இந்த படத்திற்காக ஆஸ்கர் விருது கொடுத்தால் நான் நிச்சயம் வாங்க மாட்டேன் என்று ஒரு உருட்டை உருட்டி இருக்கிறார். இதை பார்த்த பலரும் நிலநடுக்கம் வராத குறையாக ஆடிப் போய் இருக்கின்றனர்.

Also read: பணத்தாசையால் அனிருத் செய்த காரியம்.. இவ்வளவு கீழ இறங்கிட்டாரு

அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் ஹைலைட். அதாவது வெள்ளையனே வெளியேறு என்று கஷ்டப்பட்டு அவர்களை நாம் வெளியேற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது வெள்ளைக்காரன் கொடுக்கும் ஆஸ்கர் விருது எனக்கு தேவை கிடையாது. ஆனால் நம் நாட்டில் கொடுக்கும் தேசிய விருதை நான் பெற்றுக் கொள்வேன் என்று அவர் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இந்த பட குழுவினரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில் இயக்குனரின் இந்த அட்ராசிட்டியையும் அவர்கள் பயங்கரமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் மணிரத்னம் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வரும் மஞ்சள் வீரன் சாதிக்குமா அல்லது மண்ணை கவ்வுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

- Advertisement -

Trending News