திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏய் நீ ரொம்ப குண்டா அசிங்கமா இருக்க.. உருவ கேலிக்கு மஞ்சிமா மோகன் கொடுத்த நெத்தியடி பதில்

சினிமாவில் தற்பொழுது ஹீரோயின்கள் என்றால் ஒல்லியாக, சிறந்த உடற்கட்டுடன் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி உள்ளது. ரசிகர்களுக்கு இதில் சில மாற்று கருத்துகள் இருந்தாலும், தங்களுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள ஹீரோயின்களும் இதை பின்பற்றி வருகின்றனர். இதற்கு விதிவிலக்காக சில நடிகைகள் மட்டுமே உள்ளனர்.

அதில் முக்கியமானவர் நடிகை மஞ்சிமா மோகன். சிறு வயதிலிருந்தே சில படங்களில் நடித்துள்ள இவர் நிவின் பாலியின் ஒரு வடக்கன் செல்ஃபி மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார். அடுத்த வருடமே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக தமிழில் இவர் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பும், ரசிகர்களையும் தன் நடிப்பாலும், அழகாலும் கவர்ந்தார். சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

முதலில் சாதாரணமான உடற்வாகுடன் இருந்த இவர், வருடங்கள் ஓட ஓட தீடீரென கொஞ்சம் குண்டாக மாறினார். இதனால் இவருக்கு உண்மையில் பட வாய்ப்புகள் குறையத்தான் தொடங்கியுது. இருப்பினும் அதை பற்றி கவலைப்படாமல் கிடைக்கும் படங்களில் தொடர்ந்து சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தன்னை உருவ கேலி செய்து வந்தவர்களுக்கு தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் மஞ்சிமா தற்போது பதிலளித்துள்ளார். “நாம் அனைவரும் ஆரோக்கியமாக தான் இருக்க எண்ணுகிறோம், ஆனால் அது அனைவருக்கும் ஒரே போல் இருப்பதில்லை. சிலருக்கு இயற்கையாகவே உடல் எடை கூடும், சிலருக்கு செயற்கையாக உடல் எடை கூடிவிடும். ஆனால் நாம் அதற்கு யாரையும் குறை கூற முடியாது.

இதனால் தயவுசெய்து ஒருவரின் உருவத்தை வைத்து உருவ கேலி செய்வதை இனிமேலாவது நிறுத்துங்கள். நீங்கள் இவ்வாறு கேலி செய்வதால் அவருக்கு என்ன எடை குறைய போகிறதா என்ன? அவர்களின் நம்பிக்கையை தான் அது குறைக்கும். என்னுடைய திருமணத்தை மனதில் பலரும் தற்போது அவ குண்டம்மா, அந்தப் பையன் பாவம் என குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் யாரும் இதை பற்றி கருத்து கூற வேண்டாமேனவும் கூறியுள்ளார்.

அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து அவர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், ஃப்.ஐ.ஆர். போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் கௌதம் கார்த்திக் இருவருக்கும் விரைவில் திருமண நடைபெறவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News