திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கல்யாண மேடையில் அவமானப்படுத்திய உறவினர்கள்.. ஹனிமூன் வேண்டாம் என மஞ்சிமா எடுத்த அதிரடி முடிவு

நவரச நாயகனின் வாரிசான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சினிமாவில் சேர்ந்து நடித்து பிறகு காதல் வயப்பட்டு திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகளின் பட்டியலில் தற்போது இவர்களும் இணைந்து இருக்கின்றனர். இந்த ஜோடிக்கு இப்போது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நெருங்கிய உறவுகள், பிரபலங்கள் முன்னிலையில் நடந்த இவர்களுடைய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு இவர்கள் ஹனிமூன் எங்கு செல்ல இருக்கின்றனர் என்று பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை தேனிலவு கொண்டாட எந்த இடத்திற்கும் செல்லவில்லை.

Also read: திருமண தேதியை உறுதிசெய்த கௌதம் கார்த்திக்.. மஞ்சிமாவை காதலிக்க இப்படி ஒரு காரணமா?

அந்த வகையில் இவர்கள் ஹனிமூன் செல்வதை தள்ளி போட்டு இருக்கின்றனர் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கல்யாண மேடையில் மஞ்சிமாவை பார்த்து சிலர் உருவ கேலி செய்ததுதான் இந்த ஹனிமூன் கேன்சல் ஆனதுக்கு காரணமாம். ஆரம்பத்தில் ஒல்லியான உடல் வாகுடன் இருந்த அவர் சமீப காலமாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.

இதை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில் மஞ்சிமா உருவ கேலி செய்வது பற்றி எனக்கு கவலை இல்லை என தரமான பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் திருமண மேடையிலேயே அவரை சிலர் குண்டாக இருப்பதை குறிப்பிட்டு கிண்டலடித்து இருக்கின்றனர். அதிலும் நெருங்கிய உறவுகளே அவரை இப்படி கேலி செய்ததை பார்த்து கௌதம் கார்த்திக் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார்.

Also read: ஏய் நீ ரொம்ப குண்டா அசிங்கமா இருக்க.. உருவ கேலிக்கு மஞ்சிமா மோகன் கொடுத்த நெத்தியடி பதில்

ஆரம்பத்தில் மீடியா எவ்வளவு உருவ கேலி செய்தாலும் கவலை இல்லை என்று சொன்ன மஞ்சிமா மோகன் இப்போது தன் கணவரின் வருத்தத்தை பார்த்து ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். அதாவது அவர் தன் கணவருக்காக உடல் எடையை குறைக்க திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி 15 கிலோ வரை அவர் தன் எடையை குறைக்க இருக்கிறாராம்.

அதற்காக அவர் உடற்பயிற்சி, யோகா என்று பல விஷயங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறாராம். மேலும் தன்னை கேலி செய்த உறவுகளின் முகத்தில் கரியை பூசுவதற்காக அவர் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறாராம். நினைத்தபடி உடல் எடையை குறைத்து விட்டு தான் அவர் ஹனிமூன் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதுதான் புதுமண தம்பதிகளின் ஹனிமூன் கேன்சல் ஆனதற்கு முக்கிய காரணம். ஆகையால் விரைவில் பழைய மஞ்சிமாவை நாம் பார்க்கலாம்.

Also read: காதலை வெளிப்படையாக சொன்ன வாரிசு நடிகர்.. முற்றுப்புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்

Trending News