ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தளபதி 69-ல் இணைந்த சிவப்பு சேலையில் கிறங்கடிக்க 40 வயது நடிகை.. நாளுக்கு நாள், அதிகரிக்கும் மவுசு

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசி படமாக இது அமையவுள்ளதால் இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது.

கடைசியாக விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இப்படம் உலகளவில் ரூ. 430 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதை தொடர்ந்து அடுத்த பட வேளைகளில் தளபதி பிசியாக இருக்கிறார். கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், விஜய் கடைசியாக நடிக்கும் படம், மக்கள் மனதில் பதிய வேண்டும், வாக்கு வங்கி நிரம்ப வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான் படம் எடுக்க போறார் ஹெச் வினோத். இப்படம் விவசாயப் பிரச்னையைப் பேசும் அரசியல் கதையாக உருவாகவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இது காலம் காலமாக இருக்கும் ஒரு பிரச்சனையாக உள்ள நிலையில் பல படங்கள் வந்துள்ளது. அப்படி இருக்க, இதில் என்ன வித்தியாசம் காண்பிக்க போகிறார்கள் என்ற கேள்வியும் உள்ளது. இந்த நிலையில், சிம்ரன், மமிதா பைஜு, சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோர் தளபதி 69 படத்தில் நடிக்கவிருக்கின்றனர் என்றெல்லாம் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி பட்ட சூழ்நிலையில் சிவப்பு சேலையில் கிறங்கடிக்கும் நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை. பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தனுஷின் ‘அசுரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தார்.

தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை 2’-ம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள அவர் விஜய்யின் 69 வது படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சினி வட்டாரங்களில் சொல்ல படுகிறது.

Trending News