திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள துணிவு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. படத்தின் முதல் போஸ்டர் வெளியான நிலையில் பல மாதங்களாக இதிலிருந்து எந்த விதமான அப்டேட்டும் வராமல் இருந்தது. மேலும் இப்படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த காத்திருப்புக்கு பலனாக சமீபத்தில் வெளிவந்த துணிவு முதல் பாடல் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அனிருத் குரலில் சில்லா சில்லா என்ற பாடலில் அஜித் ஆடிய ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கும் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Also read: 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய்யின் ரஞ்சிதமே.. லேட்டா வந்தாலும் கெத்து காட்டிய அஜித்

இந்நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியருக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர் அஜித்துக்கு இணையான ஒரு ரோலில் கலக்கி இருக்கிறாராம். மலையாள லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவர் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் பின்னி எடுத்திருக்கிறார்.

ஆக்சன், சென்டிமென்ட் நிறைந்த படமாக உருவாகி இருக்கும் இந்த துணிவு படத்தில் அஜித் ஸ்டண்ட் காட்சிகளில் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். ஆனால் மஞ்சு வாரியர் அவரையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் பட்டையை கிளப்பி இருக்கிறாராம். அதைப் பார்த்து வியந்து போன அஜித் அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

Also read: கண்டுகொள்ளாமல் திராட்டில் விட்ட அஜித்.. சம்பளம் இல்லாமல் சிம்பு பாடிய தீ தளபதி பாடலின் முழு ரகசியம்

அதுமட்டுமல்லாமல் அவருக்கு ரிவால்வர் ரீட்டா என்ற ஒரு செல்லப் பெயரை வைத்து கூப்பிட்டு இருக்கிறார். படப்பிடிப்பு முடியும் வரை அவர் அந்த பெயரை சொல்லித்தான் மஞ்சுவாரியரை அழைத்தாராம். அந்த அளவுக்கு அவர் படக்குழுவினர் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். பொதுவாக டாப் ஹீரோக்கள் படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது.

ஏனென்றால் அப்போதுதான் ஹீரோவுக்கான மாஸ் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அஜித் மஞ்சு வாரியருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்த்து எதுவும் சொல்லவில்லையாம். அதற்கு மாறாக ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பை பார்த்து அவர் மிகவும் ஆச்சரியப்பட்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதை தற்போது படக்குழுவினர் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

Also read: அஜித்தை டென்ஷனாகிய மங்காத்தா தயாரிப்பாளர்.. இதற்கெல்லாம் காரணம் சூர்யா தானா

Trending News