புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரியாலிட்டி ஷோவில் கெட்ட வார்த்தையில் பேசிய மஞ்சு வாரியர்.. இப்படி விளம்பரம் தேடுவது ஒரு பொழப்பா

நடிகர் அஜித் நடிப்பில் வரும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள துணிவு படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் எடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். துணிவுடன் ரிலீசாக உள்ள விஜயின் வாரிசு படத்தை பார்க்கவும் கோலிவுட் வட்டாரமே காத்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே அண்மையில் இவ்விரண்டு படங்களின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

அதிலும் முக்கியமாக அஜித்தின் துணிவு பட ட்ரைலர், விஜயின் வாரிசு ட்ரைலரை முந்தியடித்துக்கொண்டு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அஜித்தின் மங்காத்தா பட பாணியில் இப்படத்தின் ட்ரைலர் உள்ளதாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த ட்ரையரில் அஜித் பேசும் வில்லத்தனமான வசனம் தெறிக்கவிட்டிருந்தது.

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களுக்கு வேற லெவல் பதிலடி கொடுத்த அஜித்.. துணிவு பிரிவியூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

மேலும் அஜித் இப்படத்தில் பல இடங்களை கெட்ட வார்த்தைகளை சரளமாக பேசியதால் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ஓடவுள்ள இப்படத்தில் மொத்தம் 17 இடங்களில் பீப் சவுண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நாயகி மஞ்சு வாரியர் அஜித்துடன் மாஸாக இணைந்து பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள நிலையில், அண்மையில் இவர் பேசிய கெட்ட வார்த்தை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணிவு படத்திற்காக எந்த ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழுவும், அஜித்தும் ட்ரைலர் வருவதற்கு முன்பாக வரை ஈடுபடவில்லை. ஆனால் ட்ரைலர் மாஸ் ஹிட்டானவுடன் இப்படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியாரும், இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ,மேலும் சில நடிகர்கள் படத்தை பற்றி பல பேட்டிகளில் பேசி ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி நடித்திய துணிவு பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஹெச்.வினோத்தும், மஞ்சு வாரியரும் இணைந்து கலந்து கொண்டனர்.

Also Read: ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்

அப்போது மஞ்சு வாரியார் மேடையில் சாந்தமாக வந்து நின்று, சிறு தூரம் நடந்து துப்பாக்கியை கையில் பிடித்து பீப் போடும் கெட்ட வார்த்தையை பேசி செய்ரோம் என பேசினார். மேலும் பீப் போட்டுடுங்க எனவும் தெரிவித்தார் மஞ்சு வாரியர். இதை பார்த்த அந்த அரங்கமே கைதட்டி சிரித்தது. இந்த வீடியோ தற்போது வைரலானதையடுத்து, இப்படியெல்லாமா ஒரு ரியாலிட்டி ஷோவில் மக்கள் முன்னிலையில் கெட்ட வார்த்தைகளை பேசுவது என மஞ்சு வாரியரை பலரும் கேள்விகேட்டு வருகின்றனர்.

சமீபக்கலாமாக ஹீரோக்கள் மாஸ் என்று நினைத்து பேசும் கேட்ட வார்த்தையால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பொது இடங்களில் சரளமாக பேசி வருவதை தினமும் பார்க்கிறோம். அந்த வகையில் நடிகைகளும் துணிச்சலாக கெட்ட வார்த்தைகளை பேசினால், பெண் பிள்ளைகளும், பொதுவெளிகளிலோ குடும்பத்திலோ பேசும்போது அவர்களது மரியாதை குறையும் வாய்ப்புகளே அதிகம். இந்நிலையில் சினிமாவில் பேசப்படும் வார்த்தைகள், நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Also Read:அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

Trending News