சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எந்த கேரக்டர்னாலும் ஆழம் பார்க்கும் மஞ்சுமல் குட்டன்.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய சௌபின் ஷாஹிரின் 5 படங்கள்

5 movies of Soubin Shahir: தற்போதைய சினிமாவில் எந்த மொழி சார்ந்த படங்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் அதற்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் மக்கள் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் அனைவரையும் கவர்ந்து விட்டது. அதிலும் இதில் கிளைமாக்ஸ் காட்சியில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்த சௌபின் ஷாஹிரின் நடிப்பு பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் இறங்கி தத்ரூபமாக நடித்திருக்கிறார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்: ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சுராஜ், சௌபின், சைஜு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தான் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் வெளிவந்தது. ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதற்கு எதிர்மாறாக இப்படம் மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று மூன்று தேசிய விருதுகளை குவித்தது.

Bro Daddy: பிரித்விராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு Bro Daddy திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன்லால், பிரித்விராஜ், லாலு, அலெக்ஸ் மற்றும் சௌபின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது இரண்டு பெரிய குடும்பங்களாக இருக்கும் நபர்கள் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் பொழுது அவர்களுக்கு இருக்கும் ஆசையால் சம்மந்தியாகலாம் என்கிற விதமாக கதை நகரும். அப்பொழுது ஏற்பாடு பண்ணும் நிகழ்ச்சியில் வரக்கூடிய பிரச்சனையை தான் படமாக காட்டப்பட்டிருக்கும். இப்படத்தில் சௌபின் அந்த திருமணத்தையே நடத்துவதற்கு திட்டம் போட்டிருப்பார்.

டிரான்ஸ்: அன்வர் ரஷீத் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு டிரான்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் பகத் பாசில், கௌதம் மேனன், திலீஸ் போத்தன், சௌபின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மோசடி நிறுவனத்தால் ஏற்படும் குளறுபடிகளும் அதனால் வரும் பிரச்சினைகளையும் சமாளிக்கும் விதமாக இப்படம் திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இதில் சௌபின், மேத்யூ வர்கீஸ் கேரக்டரில் மிரள வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மியாவ்: லால் ஜோஸ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு மியாவ் திரைப்படம் வெளிவந்தது. இதில் சௌபின், மம்தா மோகன்தாஸ், சலீம் குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் தஸ்தாகீர் என்ற வெளிநாட்டு இந்திய தொழிலதிபரைப் பற்றியது. இதில் சௌபின், தஸ்தாகிராக நடித்திருக்கிறார். அந்த வகையில் மக்களை பொழுதுபோக்கும் விதமாக முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் ஆக அமைந்து வெற்றி பெற்றது.

ரோமன்சம்: ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரோமன்சம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சௌபின், சஜின் கோபு, அர்ஜுன் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது திருமணமாகாத ஏழு ஆண்களை சுற்றி கதை நகரம். இதில் சௌபின், ஜபின் மாதவன் கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். மேலும் இப்படத்தில் இருந்து இவருக்கு மக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்து ரசிகர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். இப்படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக வெற்றி பெற்றது.

Trending News