ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அசுரனிடம் சிக்காத 100 கோடி வசூல் இயக்குனர்.. கழுவுற மீன்ல நழுவிக்கிட்டு போன சிதம்பரம்!

Manjumalboys director Chidambaram turned down the Tamil film opportunity: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் குறைந்த காலத்தில் நிறைந்த வளர்ச்சி அடைந்தவர் ஆவார். திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பல கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான தனுஷ் தனது விடாமுயற்சியின் மூலம் விஸ்வரூப வெற்றி அடைந்தார் என்பது நிதர்சனமான உண்மை. 

ஆனால் சினிமாவில் இவரிடம் உள்ள கெட்ட பழக்கம் என்னவென்றால் அடுத்தவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை ஆட்டைய போடுவது. அதாவது முக்கோண காதல் கதையாக இவர் நடித்த குட்டி, யாரடி நீ மோகினி போன்ற படங்கள் இதே மாதிரியான சப்ஜெக்ட்டை வைத்து எடுத்து இருந்தாலும் ரசிகர்களுக்கு பீல் குட் மூவியாக இருந்தது. 

Also read: கௌதம் மேனன் கேரியரில் விழுந்த 2 பெரிய அடிகள்.. அவர் பெயரை தட்டிட்டு போன தனுஷ் பெஸ்டி

தனுஷ் கைவசம் முணு படங்களை வைத்திருந்தாலும் யாரடி நீ மோகினி மாதிரி ஒரு பீல் குட் மூவியில் நடிக்க வேண்டும் என்று தீரா ஆசையுடன் இருந்து வருகிறார். இந்த ஆசையை தயாரிப்பாளர் மதுரை அன்புவிடம் சொல்ல அவரும் உடனே சம்மதித்து ஆகிவிட்டது.

இயக்குனரை தேடும்படியில் தீவிரமாக இருக்கும்போது இவர் கண்ணில் பட்டது மஞ்சுமல் பாய்ஸின் வெற்றி இயக்குனர் சிதம்பரம் பி பொடுவல். மஞ்சுமல் பாய்ஸ் டைரக்டர் சிதம்பரம்தான் இப்போது கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டட் டைரக்டர்.

எதிர்பாராமல் வந்து வெற்றி அடைந்ததோடு வசூலில்  100 கோடியை தாண்டி பிச்சுகிட்டு போகுது மஞ்சுமல் பாய்ஸ். தனுஷ் நடிக்க மதுரை அன்பு புரொடியூஸ் பண்ண ஒரு படம் பண்ணலாம் என்று மஞ்சுமல்பாய்ஸ் டைரக்டர் சிதம்பரத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது.

தனுஷ் எனக்கு யாரடி நீ மோகினி மாதிரி ஒரு பீல் குட் மூவி வேணும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிதம்பரம் நான் தமிழன் அல்ல, தமிழ் கலாச்சாரம் எனக்கு சரிவர தெரியாது.

நீங்க நினைக்கிற மாதிரி என்னால படம் எடுக்க முடியாது நான் ஒரு நியூ ஃபேஸ் வைத்து மலையாளத்தில் ஒரு படம் பண்ண போறேன் என கிளம்பி விட்டாராம். 

Also read: கொக்கி குமாரால் கொக்கி போடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் டைரக்டர்.. ஊருக்கு போகவிடாமல் கட்டம் கட்டும் தந்திரம் 

Trending News