புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொக்கி குமாரால் கொக்கி போடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் டைரக்டர்.. ஊருக்கு போகவிடாமல் கட்டம் கட்டும் தந்திரம் 

Manjummel Boys Director Chidambaram to direct Dhanush’s D54 movie: கொடுக்குற தெய்வம் கூரைய பிய்த்து கொட்டும் ஆனால் இங்கு குகையை பிய்த்து  கொட்டி இருக்கிறது என்பது போல் குணா குகை ஒன்றை மட்டுமே வைத்து சிறப்பான திரைக்கதையுடன் தரமான சம்பவத்தை  அரங்கேற்றியுள்ளார் மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் பி பொடுவல்

கேரளாவில் மஞ்சுமல் என்ற இடத்தில் இருந்து கொடைக்கானலில் சுற்றுலாவுக்கு வரும் நண்பர்கள் குழுவில் எதிர்பாராதவிதமாக ஒரு நண்பன் குகைக்குள் மாட்டிவிட, மற்றவர்கள் அவனை மீட்பதே கதை என்ற முன்னுரையுடன் வந்தது தான் மஞ்சுமல் பாய்ஸ். 

சாதாரண திரைக்கதையாக இருந்தாலும் நிமிடத்திற்கு நிமிட  விறுவிறுப்பு தன்மையைக் கூட்டி இறுதிவரை சுவாரசியமாக நகர்த்தி நண்பர் காப்பாற்றப்பட்ட உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருந்ததில் வெற்றியடைந்தார் இயக்குனர். தமிழகத்தில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து ரசிகர்கள் தொடங்கி சினிமா ஆர்வலர்கள் பலரையும் வாயடைக்க வைத்தது.

Also read : மஞ்சுமல் பாய்ஸ்ஸ விடுங்க குணா படமே ஹாலிவுட் காப்பி தான்..! கமலை வறுத்தெடுக்கும் பிரபலம்

உலகநாயகன் கமலஹாசன், தனுஷ், உதயநிதி என பலரும் இயக்குனரை பாராட்டி வருகின்றனர். வசூலிலும் தாறுமாறாக தெறிக்க விட்ட இத்திரைப்படம் 100 கோடியை தாண்டிள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் இன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிதம்பரம் கோலிவுட்டிலும் தடம் பதிக்க உள்ளார். இதற்காக தயாரிப்பாளர்கள் பலரும் சிதம்பரத்திற்கு வலை விரித்து வருகின்றனர். 

முதல் ஆளாக தனுஷ் இயக்குனர் சிதம்பரத்தை தனது படத்திற்காக கொக்கி போட்டு உள்ளார். “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” மற்றும் ஹச் வினோத்துடன் இணையும் படம், அதற்கு பின் D54 இல் சிதம்பரத்தின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி ரோமியோ பிச்சர்ஸ் இன் தயாரிப்பாளர் ராகுலும் மற்றும் ஒரு தயாரிப்பாளரும் அணுகி மும்முனைப் போட்டியாக சிதம்பரத்தை கட்டம் கட்டி உள்ளனர். 

Also read : யானை போல் தலையில் மண்ணை வாரி போடும் இயக்குனர்கள்.. தனுஷ் முதல் ஃபேமிலி ஆடியன்ஸை இழந்த 5 படங்கள்

Trending News