Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த லாட்டரி.. டாப் ஹீரோ உடன் ரகசியமாக நடந்த மீட்டிங்

மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த லாட்டரி.. டாப் ஹீரோ உடன் ரகசியமாக நடந்த மீட்டிங்

Manjummel Boys: கடந்த மாதம் வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ் 200 கோடியை அசால்டாக வசூலித்து இருந்தது. அதிலும் நம்ம ஊரு ஹீரோக்கள் இப்படத்தை பாராட்டி வளைத்து வளைத்து ட்வீட் போட்டனர். அது மட்டுமா பட குழுவினரும் சென்னையை தான் […]

Manjummel Boys: கடந்த மாதம் வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ் 200 கோடியை அசால்டாக வசூலித்து இருந்தது. அதிலும் நம்ம ஊரு ஹீரோக்கள் இப்படத்தை பாராட்டி வளைத்து வளைத்து ட்வீட் போட்டனர்.

அது மட்டுமா பட குழுவினரும் சென்னையை தான் இப்போது வட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இவர்கள் சூப்பர் ஸ்டாரை சந்தித்த போட்டோ கூட வெளிவந்திருந்தது.

ஆனால் ஏன் இவர்கள் இங்கேயே சுற்றி வருகின்றனர் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் தமிழில் படம் பண்ணுவதற்கு தயாராகிவிட்டார்.

விக்ரமுடன் இணையும் சிதம்பரம்

அதன்படி விக்ரமுடன் இவர் ரகசிய மீட்டிங் போட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த சந்திப்பில் இவர்களின் கூட்டணி இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தற்போது தங்கலானை முடித்துவிட்ட விக்ரம் அடுத்ததாக சீயான் 62 படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த இடைவெளியில் சிதம்பரம் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

அதன் பிறகு இவர்களின் கூட்டணியில் படம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த மாதம் விக்ரமின் பிறந்தநாள் அன்று இது குறித்த அப்டேட் வெளிவரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆக மொத்தம் மஞ்சுமல் பாய்ஸால் இயக்குனருக்கு மிகப்பெரும் லாட்டரி கிடைத்து விட்டது. அது மட்டுமின்றி படம் வெளிவந்த சில நாட்களிலேயே விக்ரமை இவர் சந்தித்த ரகசியமும் தற்போது உடைந்துள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.