வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

7 நாட்களில் இத்தனை கோடியா?. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்

Manjummel Boys: 2006ம் ஆண்டில் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி உள்ள படம் தான் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தின் ஏழாவது நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. கேரளாவில் மஞ்சும்மல் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றி வரும் 11 நண்பர்களில் ஒருவர் குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் ஸ்டோரி.

இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்த மலையாள படத்தில் 60% தமிழ் பேசுவது மட்டுமல்லாமல், இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது. இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும் இடம்பெற்றது தான் ஹைலைட்.

Also Read: Manjummel Boys Movie Review- குணா குகையில் சாத்தானிடம் சிக்கிய 11 பேரின் நிலைமை என்னாச்சு? ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ அனல் பறக்கும் முழு விமர்சனம்

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் 7வது நாள் வசூல் விவரம்

இதனால் தமிழ் ஆடியன்ஸை சேட்டன்கள் கவர்ந்து விட்டனர். இந்த படத்தை பார்த்த பின்பு உலக நாயகன் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார். அவர் மட்டுமல்ல உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 7 நாட்களில் மட்டும் 50 கோடியை வசூலித்துள்ளதாக தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலில் இணையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Also Read: கமலை நம்பி காசை வாரி இறைக்கும் பிரபலம் .. எல்லாம் அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்

Trending News