வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் மன்மத லீலை திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மாநாடு திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இப்படி ஒரு அடல்ட் காமெடி திரைப்படத்தை வெங்கட்பிரபு கொடுத்துள்ளார்.
படத்தின் பெயரை கேட்டவுடனே கதை எப்படி இருக்கும் என்று யூகித்த ரசிகர்கள் படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்ட காட்சிகளை பார்த்து படம் பிட்டு படம் ரேஞ்சுக்கு இருக்கும் என்று முடிவு செய்திருந்தனர். ஆனாலும் இந்த படத்தை பார்ப்பதற்கு இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர்.
அப்படி மிகவும் எதிர்பார்ப்புடன் சிறிது தாமதமானாலும் இன்று வெளியாகி இருக்கும் மன்மதலீலை திரைப்படத்தை பற்றி டுவிட்டரில் பல கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் வெங்கட்பிரபு இரண்டு காலகட்டத்தில் நடந்த விஷயங்கள் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியது என்பதை பற்றி காமெடி கலந்து கூறியிருக்கிறார்.
மேலும் படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் இருப்பதால் இப்படம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதோடு முழுக்க முழுக்க காமெடி கலந்து இருப்பதால் படம் நன்றாக இருப்பதாக தற்போது சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
வழக்கமாக தன்னுடைய திரைப்படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்து வரும் வெங்கட்பிரபு இந்த படத்திலும் ஏதோ ஒரு மேஜிக்கை செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். முன்னணி ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று எதுவுமில்லாமல் வெங்கட்பிரபு இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
ஆகமொத்தம் காலையிலிருந்து படம் வெளியாகுமா ஆகாதா என்று ஒரு குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக திரைப்படம் வெளியாகி அவர்களை குஷிப்படுத்தி உள்ளது. இருப்பினும் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால் எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.