Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் அண்ணாமலை, விஜயாவிடம் பேச வேண்டும் என்பதற்காக முத்து பாட்டியை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். பாட்டியை பார்த்ததும் விஜயா, என்ன அத்தை சொல்லாம திடீர்னு வந்து நிக்கிறீங்க என்று கேட்கிறார். ஏன் நான் வரக்கூடாதா, என்னுடைய இஷ்டம் நான் எப்ப வேணாலும் வருவேன் என்று சொல்லிய நிலையில் மாடியில் இருக்கும் அண்ணாமலையை பார்த்து பேசுவதற்கு போகிறார்.
அண்ணாமலை இடம், பசங்க முன்னாடி நீங்க இருவரும் இப்படி பேசாமல் இருப்பது நல்லா இருக்காது. பிறகு அவங்களுக்கும் ஏதாவது பொண்டாட்டியிடம் பிரச்சனை என்றால் பேசாமல் இப்படித்தான் இருப்பார்கள். இதற்கு நீயே ஒரு பாடமாக இருக்கக் கூடாது ஒழுங்கா வந்து விஜயாவிடம் பேசு என்று கீழே கூட்டிட்டு வருகிறார். அதன் பிறகு விஜயாவிடம் நீ பண்ணினதும் தப்புதான்.
விஜயாவிடம் பேசிய அண்ணாமலை
என்ன இருந்தாலும் உன் புருஷனுக்கு தெரியாமல் எதுவும் பண்ணியிருக்கக் கூடாது. அதனால் அவனிடம் மன்னிப்பு கேளு என்று பாட்டி சொல்கிறார். அப்பொழுது முத்து, எல்லாரையும் கூப்பிடுறேன் அவங்க முன்னாடி மன்னிப்பு கேட்கட்டும் என்று வீட்டில் இருப்பவர்களை கூப்பிட்டு நிற்க வைக்கிறார். உடனே விஜயா நான் பண்ணினது தப்புதான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அண்ணாமலை இடம் சொல்கிறார்.
அதற்கு அண்ணாமலையும் ஓகே என்று சொல்லிய நிலையில் பாட்டி, மனோஜை கூப்பிட்டு திட்டி நீ எல்லாம் திருந்த மாட்டியா. படிச்சவன் தானே எப்படி இருக்கணும் என்று தெரியாதா என்று சொல்லியபடி ரோகிணியையும் திட்டுகிறார். மனோஜை அவங்க அம்மாதான் செல்லம் கொடுத்து இந்த அளவுக்கு வைத்திருக்கிறார் என்றால் நீயும் அதே பண்ணாத. அவன் தப்பு பண்ணுகிறான் என்று தெரிந்தால் அதற்கு கண்டிப்புடன் இருந்து கொள் என்று சொல்கிறார்.
பின்பு முத்து, மனோஜ் அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய 27 லட்சமும், எனக்கு தரவேண்டிய இரண்டு லட்ச ரூபாய் மாதாமாதம் தர வேண்டும் என்று பாட்டியை சொல்ல சொல்கிறார். பாட்டி அது எப்படி அவனால் எல்லா பணத்தையும் கொடுக்க முடியும் என்று கேட்கிறார். அதுதான் ஷோரூம் வச்சு பிசினஸ் பண்றாங்களா, அதுல வர லாபத்தில் மாசம் எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.
உடனே அண்ணாமலை, முத்து சொல்வதும் சரிதான். மனோஜிடம் மாசம் மாசம் பணத்தை கொடு என்று பாட்டி சொல்கிறார். அதற்கு மனோஜ், என்னால முடியாது எனக்கு ஏற்கனவே நிறைய கடன் இருக்கிறது. அதனால் அதெல்லாம் தர முடியாது என்று சொல்லிய நிலையில் விஜயாவை வைத்து பேச வைக்கிறார். உடனே விஜயா அவங்க பணத்தை அவங்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அதனால் நீ ஒழுங்கா குடு மனோஜ் என்று சொல்கிறார்.
இதனை தொடர்ந்து ரோகினி இடம், இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு உங்க அப்பாவிடம் சொல்லி அந்த பணத்தையும் வாங்கி கொடுத்து விட்டால் இனி மனோஜ்க்கு எந்த பிரச்சனையும் வராது என்று ரோகிணியை விஜயா டார்ச்சர் செய்கிறார். அடுத்து இந்த பணத்தை என்னால கொடுக்க முடியாது என்று விஜயாவிடம் மனோஜ் சொல்கிறார்.
நீ பண்ணுன தப்புக்கு நீ தான் பரிகாரம் தேட வேண்டும் என்று விஜயா சொல்லி நிலையில் மனோஜ் எல்லாமே உங்களால தான் வந்துச்சு என்று விஜயா மீது பழி போடுகிறார். ஆக மொத்தத்தில் கடைசிவரை மனோஜ் கடனை திருப்பிக் கொடுக்க மாட்டார். அத்துடன் கைவசம் இருக்கும் கடையையும் இழந்து தவிக்கப் போகிறார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாட்டியை கூட்டிட்டு வந்த முத்து, அடங்கிய விஜயா
- விஜயா காலில் விழுந்து கெஞ்சும் மீனா, கடுப்பான சுருதி
- கடையை இழந்து தவிக்கப் போகும் மனோஜ்