Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், 30 லட்ச ரூபாய் பணத்தை ஏமாத்திட்டு போன கதிரை பார்த்த மனோஜ், கதிரை துரத்திட்டு போய் பிடிக்கப் பார்த்தார். ஆனால் கதிர், மனோஜிடமிருந்து எஸ்கேப் ஆகிய நிலையில் எதிர்பாராத விதமாக மனோஜ்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. இதனால் மனோஜின் கண்பார்வைக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று மொத்த குடும்பமும் பரிதவித்து போய் இருக்கிறார்கள்.
அதிலும் விஜயா மற்றும் ரோகினி, மனோஜை நினைத்து ரொம்ப நொறுங்கிப் போய்விட்டார்கள். ஆனாலும் மனோஜ்க்கு ஆறுதல் சொல்லும் விதமாக ரோகிணி உன்னை இப்படியே விட்டு விட மாட்டேன். உனக்கு என் கண்ணையாவது கொடுத்து உனக்கு கண் பார்வையை சரி செய்து விடுவேன் என்று சொல்லி மொத்த பேரையும் கலங்கடித்து விட்டார்.
அத்துடன் மனோஜும் என்னுடைய உலகமே நீதான் எனக்கு உன்னுடைய அன்பு இருந்தால் போதும் என்று ரோகிணியின் பாசத்திற்கு உருகிப் போய்விட்டார். அந்த வகையில் ரோகிணியின் திருட்டு வாழ்க்கை பற்றி வெளிவராமல் மொத்த பாசத்தையும் மனோஜ் மீது காட்டுவதால் மனோஜும் இது உண்மை என்று நம்பி அதில் குளிர்காய ஆரம்பித்துவிட்டார்.
இனி ரோகிணி பற்றி சில உண்மைகள் வெளி வந்தாலும் பெரிய அளவில் மனோஜ்க்கும் விஜயாவுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ரோகிணி மொத்தமாகவே பாசத்தை கொட்டி வருகிறார். இதனை அடுத்து அண்ணாமலையின் நண்பர் பரசுராமனின் மகள் மற்றும் கசாப்பு கடை மணியின் சொந்தக்காரர் பையனுக்கும் கல்யாண வேலைகள் நடைபெற ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த கசாப்பு கடை மணி பரசுராமனிடம் பேசும் பொழுது அதை முத்துவும் கேட்டு விடுகிறார். உடனே முத்துவுக்கு இந்த குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது என்று மீனாவிடம் சொல்கிறார். அந்த வகையில் அந்த மணியை பார்த்தாக வேண்டும் என்று முத்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார். எப்படியும் இந்த கல்யாணத்தில் ரோகிணி போட்ட மலேசியா டிராமா முடிவுக்கு வந்துவிடும்.