Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா போட்ட சவால் படி மொட்டை மாடியில் ரூம் கட்டுவதற்காக முத்து பிசினஸில் முன்னேற்றம் கொண்டுவர முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் மீனாவின் நகை பணத்தை வைத்து முத்து இன்னொரு கார் வாங்கி தெரிஞ்ச நண்பரிடம் கொடுத்து வாடகைக்கு ஓட்ட சொல்லி கொடுத்திருக்கிறார்.
இதிலிருந்து வரும் லாபத்தை ஒரு உண்டியலில் போட்டு சேகரித்து மாடியில் ரூம் கேட்டலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். அதன்படி முத்து வீட்டிற்கு உண்டியல் வாங்கிட்டு வருகிறார். இதை பார்த்து வழக்கம் போல் விஜயா, சம்பாதித்து பணத்தை சேர்ப்பதற்கு பதிலாக வீடு வீடாக பிச்சை எடுக்கப் போகிறான் என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
பயத்தில் புலம்பித் தவிக்கும் மனோஜ்
உடனே மீனா, நாங்க ஏன் பிச்சை எடுக்கணும், சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவோம் என்று மறுபடியும் சவால் விடுகிறார். அடுத்ததாக மனோஜ்க்கு வந்த மொட்ட கடிதாசியை நினைத்து மனோஜ் ரொம்பவே பயந்து போய் நிற்கிறார். அந்த வகையில் பார்க் நண்பருக்கு போன் பண்ணி ஜோசியரை பார்க்க போகிறார். அந்த ஜோசியரும் உங்களுக்கு நேரம் சரியில்லை. தினமும் உங்க ராசிப்படி இந்த கலர் டிரஸ் தான் போட வேண்டும் என்று சொல்லி மனோஜ் மனசை குழப்பி விட்டார்.
இந்த மனோஜம் அவர் சொல்வதை நம்பி சட்டையை கழட்டி விட்டு மஞ்ச கலர் துண்டை அணிந்து வீட்டிற்கு அம்மா என்று பிச்சை கேட்பது போல் வந்து நிற்கிறார். இதை பார்த்ததும் விஜயா இது என்னடா கோலம், ஒழுங்கா சட்டையை போடு என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் எதுவும் கேட்காமல் நான் இனி இப்படி தான் இருப்பேன் என்று சொல்கிறார். உடனே முத்து கடைசி இந்த நிலைமையில் தான் வந்து நிற்கப் போகிறாய் என்று கிண்டல் அடிக்கிறார்.
அதற்கு மனோஜ் நீங்க என்ன கிண்டல் அடித்தாலும் பரவாயில்லை. நான் இனி இப்படித்தான் என்று சொல்லி பூஜை ரூமுக்கு போய் சாமி கும்பிட்டு பக்தி மயமாக ரூமுக்குள் போய் உட்கார்ந்து இருக்கிறார். இது எதுவும் தெரியாம ரோகிணி வீட்டிற்குள் நுழைகிறார். அப்பொழுது முத்து இந்த பணத்தின் உண்டியலை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இதையும் திருடி போய்விடுவார்கள் என்று மனோஜை குத்தி காட்டி நக்கலாக பேசுகிறார்.
இதைக் கேட்ட ரோகிணி, மீனாவிடம் உங்க புருஷன் ரொம்ப ஓவராக தான் பேசுகிறார் என்று சண்டை போடுகிறார். அதற்கு மீனா எதுவும் நடக்காமல் என் வீட்டுக்காரர் பேசலையே நடந்தது தானே சொல்கிறார் என்று உண்டியலை பத்திரமாக வைக்க முடிவு பண்ணி விட்டார்கள். இந்த கோபத்துடன் ரோகிணி ரூமுக்குள் போகிறார். அங்க போய் பார்த்தால் மனோஜ் இருக்கும் கோலத்தை பார்த்து இன்னும் கடுப்பாகிறார்.
உடனே என்னாச்சு மனோஜ், ஏன் சட்டை போடாமல் இருக்கிறாய். அந்த முத்து மறுபடியும் உன்னை அடித்து விட்டானா, இரு அவன என்ன பண்ணுறேன் பாரு என்று கோபத்துடன் சண்டை போட கிளம்பி விட்டார். உடனே மனோஜ், ரோகிணி நில்லு அதெல்லாம் ஒன்னும் அவன் செய்யவில்லை. மொட்டை கடிதாசிக்கு பரிகாரமாக நான் கொஞ்ச நாளைக்கு இப்படி தான் இருப்பேன் என்று சொல்கிறார்.
அதற்கு ரோகிணி அந்த மொட்டை கடுதாசி நினைத்து நீ ஏன் மனதை போட்டு குழப்பி சந்தோஷத்தை இழக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் நான் யாரையும் நம்புவதாக இல்லை. எனக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை அதனால் இப்படித்தான் இருப்பேன் என்று சொல்கிறார். உடனே ரோகிணி, அப்படி என்றால் என்னை கூட நம்ப மாட்டியா என்று மனோஜிடம் கேட்கிறார். அதற்கு மனோஜ் ஆமாம் நான் உன்னையும் நம்ப மாட்டேன் என்று ரோகிணி மேல் சந்தேகப்பட்டு பேசுகிறார்.
ஆக மொத்தத்தில் ஜீவா போட்ட ஒரு மொட்டைக் கடிதாசி ரோகிணி மனோஜை வைத்து கிரிஷ்டன் வாழ வேண்டும் என்று போட்ட ஐடியாவை எல்லாம் தவிடு பொடியாகும் விதமாக கல்யாணி தலையில் கல்லை தூக்கி போட்டு கெதி கலங்க நிற்க விட்டார். இது மட்டுமில்லாமல் க்ரிஷ் பிறந்தநாள் அன்று ரோகிணி பற்றிய ஒரு சில விஷயம் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. அதனை தொடர்ந்து கல்யாணி யார் என்பதை முத்து கண்டுபிடிக்க போகிறார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- விஜயாவிடம் இருந்து தப்பித்த ரோகிணி, க்ரிஷ் மூலம் வரும் சந்தேகம்
- முத்துக்கு பணத்தை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் மனோஜ்
- ரோகிணி கொடுத்த பணத்தில் பிசினஸ் பண்ணும் முத்து