Sirkadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு ரோகினி மீது இருக்கும் கோபத்தை தனித்து ரோகிணியை மறுபடியும் வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று ஊரில் இருந்து பாட்டி வந்து விட்டார். பாட்டி வந்ததும் ரோகிணி மற்றும் விஜயாவுக்கு போன் பண்ணி வீட்டிற்கு வரவழைத்து விட்டார். அப்படி ரோகிணி வரும்பொழுது ஆத்திரப்பட்ட விஜயா, ரோகிணி பொய் சொன்னதை நினைத்து மனோஜிடம் அடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்.
ஆனால் மனோஜ் அடிக்காமல் இருந்த சூழ்நிலையில் விஜயாவுக்கு கோபம் வந்ததால் ரோகிணியை அடித்து ஏன் பொய் சொன்னாய் என்று கேட்கிறார். இதை பார்த்த மனோஜ், தன்னுடைய பொண்டாட்டியை எப்படி எல்லோரும் முன்னாடியும் அடிக்கலாம் என்று ஆத்திரப்பட்டு விஜயாவை அடிக்க விடாமல் தடுத்து விடுகிறார். மனோஜ் இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்காத ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நின்றது.
அதிலும் விஜயா, என் பிள்ளையை எனக்கு எதிராக திருப்பி விட்டாயா? என்று ஆக்ரோஷத்தில் உன் பொண்டாட்டியை காப்பாற்ற என்னிடமே பொய் சொல்லுவியா என்று மனோஜையும் அடிக்கிறார். ஆனால் மனோஜ், நான் போய் எதுவும் சொல்லவில்லை. ரோகினியின் மாமாவாக நடிக்க தான் வந்தார் என்று எனக்கு முன்னாடியே தெரியும் என்று பொய் சொல்லி குடும்பத்திடமிருந்து ரோகிணியை காப்பாற்றுகிறார்.
இப்படி மனோஜ் மாறுவார் என்று எதிர்பார்க்காத ரோகிணியும் சந்தோஷமாகிவிட்டார். அடுத்து இப்படியே மனோஜ் வைத்து ஒவ்வொன்றாக காய் நகர்த்தி தனியாக கூட்டிட்டு போய்விட வேண்டும் என்று ரோகிணி அடுத்த பிளான் போட தயாராகி விடுவார். இப்படி ரோகினி மற்றும் மனோஜ் அவர்களை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவாங்க என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.
ஆனால் இந்த முத்து மற்றும் மீனா கடைசி வர தியாகியாகவும் முட்டாளாகவும் மற்றவர்களுக்காக வாழ்ந்து அவர்களுடைய சந்தோஷத்தை இழந்து நிற்கப் போகிறார்கள். கடைசியில் ரோகினிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்று தெரிந்தாலும் இந்த மனோஜ் தாராளமாக எல்லாத்தையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் திருமணம் சரியாக அமையாவிட்டால் இரண்டாவது திருமணம் பண்ணலாம், ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்காக மற்றவர்களை பகடகாயாக பயன்படுத்தி ஏமாற்றி அந்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் ரோகிணி ஒரு சிறந்த முன் உதாரணமாக இல்லை. அத்துடன் இதற்கெல்லாம் காரணம் முத்து மற்றும் மீனாதான் என்று இன்னும் அவர்களை பழி வாங்குவதற்கு ரோகினி பல தில்லாலங்கடி வேலைகளை பார்க்கப் போகிறார்.