வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

மகனை ஓவராக நம்பிய விஜயாவுக்கு மனோஜ் வைத்த ஆப்பு.. ஸ்ருதியால் அவஸ்தைப்படும் ரவி, முந்தபோகும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டி வந்த வேலை நல்லபடியாக முடிந்து விட்டது. அதாவது விஜயா மற்றும் அண்ணாமலை இருவருக்கும் இருந்த மனக்கசப்பை சரி செய்து இருவரையும் கோவிலுக்கு அனுப்பி வைத்தார். இவர்களை கூட்டிட்டு போன முத்து மற்றும் மீனா போகும் வழியில் அப்பா அம்மாவுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்று சேர்த்து விட்டார்.

வீட்டுக்கு வந்த பிறகு அண்ணாமலை, விஜயா தண்ணீர் கொண்டு வா என்று பேசிய நிலையில் விஜயா முகத்தில் சந்தோஷம் வர ஆரம்பித்துவிட்டது. இதனை தொடர்ந்து சுருதி மற்றும் ரவி அனைவரும் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்கள். அந்த வகையில் பாட்டி செய்த காரியம் என்னதான் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் யாரிடமும் பேசாமல் இருக்க கூடாது.

முத்து பிசினஸ்க்கு அடித்தளம் போட்ட மீனா

அதற்கு பதிலாக உடனே இருவரும் பேசி அந்த விஷயத்தை சரி செய்து கொண்டால் எல்லா பிரச்சனையும் முடிந்து போய் சந்தோசமாக இருக்கலாம் என்று அறிவுரை கொடுக்கிறார். இதனை தொடர்ந்து மனோஜ்க்கு மட்டும் தூக்கம் வராமல் தவிக்கிறார். பிறகு விஜயாவுக்கு போன் பண்ணி வெளியே கூப்பிடுகிறார். அப்பொழுது அந்த மொட்டை கடுதாசியை கொடுக்கிறார்.

இதை பார்த்த விஜயா, மாசம் மாசம் 50000ரூபாய் கொடுக்காமல் எஸ்கேப் ஆவதற்கு நீ ஏதோ பிளான் பண்ணி இருக்க போல. இந்த மாதிரி திருட்டு வேலை எல்லாம் நிப்பாட்டி விட்டு ஒழுங்கு மரியாதையா பணத்தை கொடுக்க பாரு என்று விஜயா, மனோஜிடம் சொல்கிறார். ஆனால் மனோஜ் நான் ஏதும் பண்ணவில்லை. எனக்கு உன் மேல தான் சந்தேகம் இருக்கிறது.

உன்னால் தான் எனக்கு பிரச்சனை வரும் போல, என்கூட இருப்பவர்கள் தான் என்னை ஏமாற்றுவார்கள் என்று இதில் போட்டு இருக்கிறது. அதன்படி நீதான் என்னை ஏமாற்றுவாயோ என்று எனக்கு தோன்றுகிறது என்று விஜயாவிடம் நேரடியாக சொல்லி மனசு கஷ்டப்படுத்தும் படி மனோஜ் பேசி விட்டார். ஓவராக தலையில் தூக்கி வைத்து ஆடிய விஜயாவுக்கு இந்த வார்த்தை தேவை தான்.

அடுத்ததாக சுருதி, குழந்தை பெற மாட்டேன் என்று ரவியிடம் சொல்கிறார். ஏன் என்னாச்சு என்று ரவி கேட்கும் பொழுது, பிரசவ வலி எந்த மாதிரியாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது. அதை எல்லாம் என்னால் அனுபவிக்க முடியாது. குழந்தை வேண்டுமென்றால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. அதன் மூலம் நாம் பார்த்துக் கொள்ளலாம். அதனால் என்கிட்ட கூட நீ நெருங்க கூடாது என்று ரவிடம் சொல்லிட்டார்.

இதைக் கேட்ட ரவி இது என்ன வம்பா போச்சு, இந்த ஸ்ருதி எப்பொழுது தான் இதை எல்லாம் புரிந்து கொள்வார் என்று புலம்பிக்கொள்கிறார். அடுத்ததாக பிசினஸில் ஒரு படி முன்னேற்றம் காட்டும் விதமாக ரோகினியை விட மீனா முந்தி கொண்டார். அந்த வகையில் நகைக்கு கொடுத்த பணத்தை வைத்து முத்து செகண்ட்ல இன்னொருகாரு வாங்கிட்டார்.

அதை வாடகை விட்டு அதன் மூலம் லாபத்தை பார்க்கலாம் என்பதற்காக முத்து நண்பர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து அண்ணாமலை கையால் கார் சாவியை கொடுத்து புது பிசினஸ்க்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார். அடுத்ததாக மனோஜ் அவருடைய பயத்தை சரிகட்டும் விதமாக சன்னியாசி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு மறுபடியும் ஒரு கூத்தடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ, ஆனால் ரோகிணி மாட்டும் தருணம் நெருங்கி கொண்டே வருகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News