Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பொறுத்த வரை எப்படியாவது மனோஜ் மனதில் இடம் பிடித்து தன்னை பற்றி ரகசியங்கள் தெரிந்தால் கூட என்னை விட்டுப் போக கூடாது என்ற நோக்கத்தில் ரோகினி பல தில்லாலங்கடி வேலைகளை செய்து மனோஜ் மனசை குளிர வைத்து வருகிறார். அந்த வகையில் ஜீவாவிடம் இருந்து 30 லட்ச ரூபாயை ரோகிணி தந்திரமாக திரும்ப பெற்றார்.
அதை மனோஜ், வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிடலாம் என்று சொல்லிய நிலையில் ரோகிணி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இந்த பணத்தை வைத்து பிசினஸ் பண்ணலாம் என்று மனோஜ் மனதில் ஆசையை காட்டி ஷோரூம் வைப்பதற்கு ப்ளான் பண்ணிவிட்டார். அதன்படி மனோஜ், ரோகிணியின் அப்பா 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார் என்று பொய் சொல்லி அதை வைத்து நான் பிசினஸ் பண்ணி வளர்ந்து காட்டுவேன் என சொன்னார்.
அவர் சொன்னபடி பிசினஸில் சின்ன சின்ன வெற்றியை பார்த்துக் கொண்டு வருகிறார். ஆனால் தற்போது மொத்தத்தையும் இழக்கும் விதமாக ஷோரூமில் சம்பாதித்த பணத்தை முட்டாள்தனமாக ECR இல் வீடு வாங்க கொடுக்கப் போகிறார். அதாவது தன்னுடைய சொந்த வீடு என்று ஒரு கும்பல் மனோஜ் மற்றும் ரோகினையை ஏமாற்றி விற்று விட்டார்கள். அவர்கள் சொல்வதை தீர விசாரிக்காமல் மனோஜ் மற்றும் ரோகினி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் புது வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள்.
பிறகு அவர்கள் முன்னிலையில் 30 லட்சம் பணத்தை கொடுத்து விடுகிறார்கள். உடனே ஏமாற்றும் வந்து கும்பல் கிடைத்தது வரை லாபம் என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். அப்பொழுது அங்கே வந்த முத்து, இந்த வீட்டுக்கு அவங்க தான் ஓனரா? இவ்வளவு பெரிய வீட்டின் ஓனர் என்று சொல்கிறாய் ஆனால் வாடகை காரில் போகிறார் என்று சந்தேகப்படுகிறார்.
அதற்கு மனோஜ் அவங்க ஏர்போர்ட் போகிறார்கள், அதனால் வாடகைக்கு கார் எடுத்துட்டு போறாங்க. உனக்கு தேவையில்லாத விஷயத்தில் நீ தலையிடாதே என்று முத்துவின் வாயை அடைத்து விடுகிறார்கள். பிறகு அனைவரும் வீட்டை சுற்றிப் பார்த்து வெளியே எல்லாம் பார்த்து வருகிறார்கள். ஆனால் விஜயா, மனோஜ் ஏதோ பெரிய சாதனை பண்ணிவிட்டார் என்ற நினைப்பில் வாய் அடைத்து போயி பெருமையாக பேசி வருகிறார்.
அது மட்டுமில்லாமல் மனோஜின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு ரோகிணி தான் முக்கிய காரணம் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால் மனோஜ் மற்றும் ரோகினி பொறுத்தவரை பெருமைக்காக வீடு வாங்க நினைத்து அந்த மொத்த பணத்தையும் எருமைக்கு கொடுக்கும் அளவிற்கு பணத்தை மொத்தமாக கொடுத்து ஏமாந்து விட்டார்கள். எல்லா பணத்தையும் இழந்திட்டோம் என்று நினைக்கும் பொழுது அந்த தருணத்தில் மீனா அவருடைய பிசினஸில் கொஞ்சம் கொஞ்சமாக லாபம் பார்த்து வளர்ந்து ஒரு தொழிலதிபராக ஜெயித்து விடுவார்.
அத்துடன் ரோகிணி பண்ணிய தில்லாலங்கடி விஷயமும் முத்துவுக்கு தெரிந்தால் முத்துவிடம் மாட்டிக்கொண்டு ரோகிணி ஒவ்வொரு நிமிஷமும் அல்லல்பட போகிறார். அந்த வகையில் இனிதான் முத்துவின் ஆட்டம் ஆரம்பம் என்பதற்கு ஏற்ப மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்கள்.