புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீனா கொடுத்த சாட்டை அடியில் சரண்டர் ஆன மனோஜ் ரோகிணி.. உறைந்து போன விஜயா, சந்தோஷத்தில் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா அந்த வீட்டு வேலைக்காரியாக இருப்பதால் ஒவ்வொருவரும் அதிகாரம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மனோஜ் நண்டு ரசம் வேண்டும் என்று மீனாவிடம் அதிகாரம் பண்ணுகிறார். அதற்கு மீனா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்க மனைவியிடம் போயிட்டு கேளுங்கள். நான் ஏன் போட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்கு மனோஜ், என் மனைவியின் ஸ்டேட்டஸ் என்ன உன்னுடைய ஸ்டேட்டஸ் என்ன. நீ இங்கே நாங்கள் சொல்ற வேலையை செஞ்சு தான் ஆகணும். எங்க அம்மாவை எதிர்த்து பேசினால் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்று வாய் தொடுக்காக மீனாவிடம் பேசுகிறார். இதைக் கேட்டு ஆவேசப்பட்ட மீனா ரூமுக்குள் போய் முத்துவின் பெல்ட்டை கையில் சுழற்றி வந்து மனோஜை வெளுத்து வாங்கும் அளவிற்கு அடியை பின்னுகிறார்.

ஓவராக சந்தோஷத்தில் சொல்லும் முத்து மீனா

இதை பார்த்ததும் விஜயா பயத்தில் உறைந்து போய்விட்டார். அப்பொழுது அங்கு வந்த ரோகினி என்ன ஆச்சு மனோஜ் என்று கேட்க, நடந்த விஷயத்தை மனோஜ் சொல்லிய பொழுது மீனாவை திட்டுவதற்கு ரோகிணி போகிறார். ஆனால் மீனாக்கு இருக்கும் கோபத்தினால் அந்த பெல்ட்டை வைத்து மனோஜ் மற்றும் ரோகினிக்கும் சேர்த்து அடி விழுகிறது.

பிறகு அடித்தாங்க முடியாமல் மீனாவிடம் மனோஜ் மற்றும் ரோகினி மன்னிப்பு கேட்டு சரண்டர் ஆகி விட்டார்கள். அந்த நேரத்தில் விஜயா, நான் எவ்வளவு பேசுறேன் நீ என் மரமா நின்னுகிட்டு இருக்க என்று கேட்கிறார். உடனே மனோஜ், என்ன ஆச்சு உனக்கு என்று அதட்டம் போது தான் தெரிகிறது மீனா இதையெல்லாம் கனவாக நினைத்து பார்த்திருக்கிறார் என்று.

கனவு பார்க்கும் போதே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. எப்பொழுது நிஜமாக நடக்கப்போகுது என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்த மக்கு மீனா, கனவிலேயே எதையோ சாதித்திட்ட மாதிரி விழுந்து விழுந்து சிரிக்கிறார். மீனா ஏன் இப்படி சிரிக்கிறார் என்று தெரியாத விஜயா மற்றும் மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். அப்பொழுது அங்கே வந்த ரோகினியும், மீனாவிடம் ஏன் சிரிக்கிறீங்க என்று கேட்கும் பொழுது மீனா, மனோஜை அடித்தது நினைத்து மறுபடியும் சிரிக்கிறார்.

அந்த நேரத்தில் முத்து வந்த பொழுது விஜயா நடந்த விஷயத்தை சொல்லி எதற்காக உன் மனைவி சிரிக்கிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. நீயாவது கேட்டு சொல்லு என்று கேட்கிறார். அப்பொழுது முத்து, மீனாவிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். உடனே மீனா நினைத்த கனவை பற்றி முத்துவிடம் சொல்கிறார். இதை தெரிந்து கொண்ட முத்துவும் உடனே சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்படி முத்து மீனா சிரித்துக்கொண்டே இருக்கும் பொழுது கடுப்பான ரோகினி, விஜயா மற்றும் மனோஜ் ரூம்குள் போய்விட்டார்கள். கடைசி வரை இந்த மீனா இப்படி கனவில் மட்டும் தான் இந்த மாதிரி விஷயங்களை செய்ய முடியும். நிஜத்தில் எப்பொழுது எதிர்த்து பேசி தில்லாக நிற்கப் போகிறார் என்பது தெரியவில்லை. இதனை அடுத்து கோவிச்சிட்டு போன சுருதியை சமாதானப்படுத்துவதற்காக ரவி அவருடைய மாமியார் வீட்டுக்கு போகிறார்.

அங்கே போனதும் சுருதியை சமாதானப்படுத்தும் விதமாக பேசுகிறார். கடைசியில் சுருதிக்கு ஒரு டைமண்ட் மோதிரம் வாங்கிட்டு வந்து கொடுத்து எப்படியோ சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுகிறார். இதனை தொடர்ந்து ரோகிணி, வித்யாவிற்கு ஃபோன் பண்ணி மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷமாக வீட்டில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு பார்ப்பதற்கு ரொம்ப கடுப்பாக இருக்கிறது. இவர்களுடைய சந்தோசத்தை நிறுத்த வேண்டும் என்றால் அந்த வீடியோவை நான் எடுக்க வேண்டும் என்று சொல்லி மறுபடியும் ஒரு பிளான் போடுகிறார். இனி என்னதான் ரோகினி அந்த வீடியோவை வெளியிட்டாலும் முத்து மற்றும் மீனாவிற்கு பிரச்சனை வரப்போவதில்லை. அதற்கு பதிலாக ரோகிணி தான் முத்துவிடம் கூடிய விரைவில் சிக்க போகிறார்.

Trending News