புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜயா தலையில் இடியை இறக்கிய மனோஜ்.. ரோகிணியிடம் பத்திரகாளி ஆக மாறிய மாமியார்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் விஜயா, ரோகிணி பணக்கார வீட்டு பெண் என்று நினைத்து தலையில் தூக்கி வைத்து ஆடி வருகிறார். அத்துடன் விஜயா பியூட்டி பார்லர் என்று தன்னுடைய பெயரை வைத்து பிசினஸ் பண்ணுகிறார் என்று ஓவர் அதம்பல் பண்ணினார்.

ஆனால் தற்போது எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ஆப்பு வைத்து விட்டார். அதாவது ரோகினியை பார்ப்பதற்கு மனோஜ் பியூட்டி பார்லருக்கு போயிருந்தார். அங்கே தன்னுடைய அம்மா பெயர் இல்லாமல் வேறு ஏதோ ஒரு பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.

இதைப் பற்றி ரோகினி இடம் கேட்டதற்கு, மனோஜ் ஒரு வடிகட்டின முட்டாள் என்பதை தெரிந்து கொண்டு பொய் பித்தலாட்டம் பண்ணி அவரை ஏமாற்றி விடுகிறார்.

அவரும் ரோகினி சொல்வதை நம்பி வீட்டிற்கு சென்று அம்மா பெயரில் தற்போது பார்லர் இல்லை. ஏனென்றால் அடுத்த கட்ட லெவலுக்கு பிசினஸ் கொண்டு போவதற்காக தற்போதைக்கு பெயர் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்.

உக்கிரமாக மாறிய விஜயா

இதைக் கேட்டதும் விஜயா முகத்தில் ஒரு நெருப்பு பிரளயமே வெடித்திடும் அந்த அளவிற்கு உக்கிரமாக இருந்தார். ஆனாலும் முத்து மற்றும் மீனா முன் கௌரவத்தை விட்டு கொடுக்கக் கூடாது என்பதற்காக இதெல்லாம் ஒரு தப்பும் இல்லை என்று சாதாரணமாக சொல்லி அந்த பஞ்சாயத்தை முடித்து விட்டார்.

அதன் பின் ரோகினியை தனியாக ரூமுக்குள் கூப்பிட்டு, இதுதான் உண்மையான விஜயா என்று காட்டிவிட்டார். அதாவது வீடு வீடா போயி மசாஜ் பண்ணிட்டு இருந்த ஒன்ன ஓனராக வேண்டும் என்பதற்காக என்னுடைய வீட்டை அடமான வைத்து பத்து லட்ச ரூபாய் கொடுத்தேன்.

ஆனால் நீ எனக்கு தெரியாமல் என் பெயரில் இருக்கும் பார்லரை மாற்றி வேறொரு பெயரை வைத்திருக்கிறாய். என்கிட்ட கொஞ்சம் கூட சொல்லவே இல்லை. நீ எது பண்ணாலும் எனக்கு சொல்லிட்டு தானே பண்ணனும்.

உன் இஷ்டத்துக்கு பண்ணுறேன்னா இது என்ன உங்க அப்பா வீட்டுக்காசா, ஒழுங்கு மரியாதையா இருக்குன்னு இரு என்று ரோகினிடம் பத்ரகாளி மாதிரி சாமி ஆடி விட்டார். இதை பார்த்து அரண்டு பொய் திக்கு தெரியாமல் திணறி வருகிறார் ரோகினி.

அத்துடன் இந்த விஷயத்துக்கே இந்த வரத்து வராங்கனா, இன்னும் என்னைப் பற்றி எல்லா ரகசியமும் தெரிந்தால் என்ன வச்சு பார்க்க மாட்டாங்க.

அதற்கு முன்னாடி இதுக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ரோகினி மறுபடியும் ஒரு பிளான் போடுகிறார். ஆக மொத்தத்தில் விஜயா மாதிரி ஒரு ஆளு இருக்கிற வரை ரோகிணி கடைசி வரை ஏமாற்றி கொண்டே தான் இருக்க போகிறார்.

Trending News