வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கடையை இழந்து தவிக்கப் போகும் மனோஜ்.. அண்ணாமலையின் பணத்தை முத்துவிடம் கொடுக்கும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவின் நகை எப்படி கவரிங் நகையாக மாறியது என்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வேண்டும் என்று பிளான் பண்ணி மனோஜ் மற்றும் விஜயாவின் தில்லாலங்கடி வேலையை நிரூபித்துக் காட்டி விட்டார். ஆனால் அதன் பின்பு எதுவும் நடக்காத மாதிரி முத்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்து வருகிறார்.

விஜயா ஏதாவது ஒரு டிராமாவை பண்ணி பிரச்சினையை பெருசாக்காமல் பார்த்துக் கொள்ளணும் என்று நினைத்தார். அதன்படி மனோஜ் அடிவாங்கியதோடு அண்ணாமலை இனி நான் விஜயாவிடம் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதோடு இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக மீனா மற்றும் முத்து மறுபடியும் வீட்டுக்கு சேவகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மக்கு மனோஜை நம்பி ஏமாறப்போகும் ரோகினி

அதிலும் இந்த மீனா, அத்தை பாவம் மாமா பேசாமல் இருந்தால் அத்தை ரொம்பவே கஷ்டப்படுவார்கள் என்று ஓவராக பாசமலையை பொழிகிறார். அதுமட்டுமில்லாமல் காலையில் சாப்பாடு பண்ணும் விதமாக பூரி கிழங்கு எல்லாத்தையும் பண்ணி எதுவுமே நடக்காத போல் ரோகிணி மனோஜை சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் கொஞ்சமாவது ரோகினிக்கு சூடு சொரணை இருப்பதால் எங்களுக்கு சாப்பாடு தேவை இல்லை.

அதற்கும் வந்து உன் புருஷன் ஏதாவது சொல்லுவாரு நாங்க வெளியிலேயே சாப்பிடுகிறோம் என்று ரோசப்பட்டு பேசினார். ஆனால் இந்த மனோஜ், நாம் ஏன் வெளில போய் சாப்பிடணும். நாமளும் தானே இந்த வீட்டுக்காக மாசம் காசு கொடுக்கிறோம் இங்கே சாப்பிட்டு போகலாம் என்று பூரி சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள். பிறகு விஜயாவும் வந்து சாப்பிடும் பொழுது முத்து வழக்கம்போல் நக்கல் பேச்சை ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் சாப்பிடுவதற்கு வந்த சுருதி நானும் ரவியும் வெளியிலே போய் சாப்பிடணும் என்று நினைத்தோம் என்று சொல்கிறார். அதற்கு ஏன் சுருதி இந்த நேரத்தில் நான்தான் சமைத்திடுவனே என்று மீனா சொல்கிறார். உடனே சுருதி, நேத்து அத்தை உங்ககிட்ட நடந்துக்கிட்ட முறை ரொம்பவே மோசமாக இருந்தது. அதனால் நீங்கள் வருத்தப்பட்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

நானாக இருந்தேன் என்றால் இந்த வீட்டை விட்டு போய் இருப்பேன் என்று ரோசப்பட்டு பேசுகிறார். இவ்வளவு பட்டும் திருந்தாத மீனா வழக்கம்போல் அந்த வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வேலை பார்த்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூம் கடைக்கு போகிறார்கள். அங்கே போலீஸ் மற்றும் கம்மி விலையில் பொருட்களை வாங்கிட்டு போன கஸ்டமரை கூட்டிட்டு வருகிறார்.

வந்ததும் இவர் உங்களுடைய பொருளை திருப்பிக் கொடுத்து விடுகிறார். ஆனால் அதற்கு பதிலாக இவர் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சொல்கிறது. இதைப் பற்றி எதையும் விசாரிக்காமல் ரோகிணியும் சரி நாங்கள் கொடுத்து விடுகிறோம் என்று சொல்கிறார்.

உடனே மனோஜ் நம்மிடம் எங்கே பணம் இருக்கிறது என்று கேட்க அவசர செலவுக்காக நாம் வைத்திருக்கும் பணத்தை எடுத்து இவருக்கு ஒரு லட்ச ரூபாவும் முத்துவுக்கு 2 லட்சம் பணம் கொடுத்து விடலாம் என்று ரோகினி சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்த கடை ஊழியர்கள் சரியான முட்டாள்களா இருப்பாங்க போல. அந்த வகையில் இவர்களை ஈசியாக ஏமாற்றி விடலாம் என்று பிளான் பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் கூடிய விரைவில் மொத்த கடையும் இழந்து நிற்கப் போகிறார் மனோஜ்.

இந்த மக்கு புருஷனை நம்பி ரோகிணியும் அவமானப்பட்டு நிற்கப் போகிறார். ஆனால் அதற்குள் அண்ணாமலையின் பணம் ரோகிணியிடம் கொஞ்சம் இருப்பதால் அதை வைத்து முத்துவின் கடனை தீர்க்க முடிவெடுத்திருக்கிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முக்கிய சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News