புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அளவுக்கு மீறி செலவு செய்த மனோஜ், ரோகிணிக்கு கொடுத்த பரிசு.. விஜயா நகை வைத்து ரூம் கட்ட போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா கிடைத்த ஒரு லட்ச ரூபா பணத்தை வைத்து மாடியில் ரூம் கட்டுவதற்கு அஸ்திவாரத்தை போட்டு விடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். அத்துடன் ஒரு நாளில் ஒரு லட்ச ரூபா கையில கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து முத்து அதிக அளவில் சந்தோஷப்பட்டு மீனாவிடம் மகிழ்ச்சியாக பேசிக்கொள்கிறார்.

இதை பார்த்த விஜயா வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் புலம்பிக் கொள்கிறார். இதனை அடுத்து ரவி மற்றும் சுருதி போட்டியில் தோற்றுப் போனது வருத்தமாக இருக்கிறது என்பது போல் பேசிக்கொள்கிறார்கள். அத்துடன் இதில் கலந்து கொள்ளாமலேயே இருந்து இருக்கலாம், இந்த போட்டியை பற்றி வீட்டில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று ரவி கொஞ்சம் ஆதங்கத்துடன் சுருதியிடம் பேசுகிறார்.

விஜயாவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த முத்து

அதற்கு சுருதி, நீ தான் சொதப்பிவிட்டாய் நான் ஏற்கனவே குழந்தை பெற்றெடுப்பதை பற்றி சொல்லியிருக்கிறேன். அது தெரிந்தும் மூன்று குழந்தை வேண்டும் என்று சொல்லி இருக்கிறாய். நான் என்ன குழந்தை பெற்றுக் கொடுக்க மெஷினா என்று கேட்கிறார். உடனே இதை வைத்து சண்டை போட்டு விடாதே எனக்கு எந்த குழந்தையும் வேண்டாம் என்று ரவி சொல்கிறார்.

இதை கேட்டுட்டு சும்மா இல்லாமல் சுருதி, அது எப்படி நீயே முடிவு பண்ணலாம் எனக்கு குழந்தை வேணும் என்று போட்டி போட்டு பேசிக் கொள்கிறார். இனியும் சுருதியிடம் பேசி புரிய வைப்பது வேஸ்ட் என்று ரவி நினைத்த நிலையில் கையெடுத்து கும்பிட்டு படுக்கப் போய்விட்டார். அடுத்ததாக ரோகிணி மற்றும் மனோஜ் நாம் தான் பெஸ்ட் ஜோடி என்று பேசிக்கொள்கிறார்கள்.

நான் இதுவரை உன்னிடம் எந்த விஷயத்தையும் மறைத்ததில்லை, அப்புறம் ஏன் நாம் ஏதோ ஒரு விஷயத்தை மறைப்பது போல் அனைவரும் சொல்கிறார்கள் என்று மனோஜ் சந்தேகத்துடன் ரோகிணியை கேட்கிறார். உடனே என்னை சந்தேகப்படுகிறாயா? நான் ஏதாவது மறைக்கிறேன் என்று நினைக்கிறாயா? என்று கேட்கிறார்.

அதற்கு மனோஜ் அப்படி எல்லாம் இல்லை, நீ தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று பாராட்டி பேசுகிறார். இதனை அடுத்து முத்து மாடியில் ரூமு கட்டுவதற்கு இன்ஜினியரை பார்த்து பேசி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அப்பொழுது மாடிக்கு முத்து மீனா இன்ஜினியர் போன நிலையில் மொத்தமாக 5 லட்ச ரூபாய் செலவாகும் என்று சொல்கிறார்.

அப்பொழுது முத்து என்னிடம் தற்போது ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது. அதை வைத்து ஆரம்பிங்க அப்புறம் போக போக நான் பணத்தை கொடுக்கிறேன் வீடு கட்டி முடிக்கலாம் என்று சொல்கிறார். உடனே என்ஜினியர் அப்படி கட்டினால் சரிப்பட்டு வராது முக்கால்வாசி பணமாவது இருந்தால் தான் சீக்கிரமாக ரூம் கட்டி முடிக்க முடியும் என்று சொல்கிறார். இதை மாடிப்படியில் இருந்து விஜயா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதன் பின் விஜயா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை பார்த்த முத்து, அம்மாவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் விதமாக மீதி இருக்கும் பணத்துக்கு அம்மாவின் நகையை அடகு வச்சு அதன் மூலம் பணத்தை ஏற்பாடு பண்ணி மாடியில் ரூம் கட்டி முடிக்கலாம் என்று கூறுகிறார். இதை கேட்டதும் விஜயா, பதட்டத்துடன் நான் எதற்கு நகையை கொடுக்க வேண்டும் என்று ஓடிப் போய் விடுகிறார்.

ஆனால் இந்த விஜயா நகையையும் பணத்தையும் முத்துவுக்காக கொடுக்க வாய்ப்பில்லை. முத்துவும் அம்மாவிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொந்த காசு வைத்து மாடியில் ரூமை கட்டி முடிப்பார். அடுத்ததாக மனோஜ் பெருமைக்காக அதிக செலவு செய்து ரோகிணிக்கு தாலி செயினை வாங்கிட்டு வருகிறார். அத்துடன் டிரஸ் என்று நிறையவும் வாங்கிட்டு வருகிறார்.

இதை பார்த்ததும் விஜயா சந்தோஷத்தில் மனோஜை உயர்த்தி பேசி முத்துவை மட்டம் தட்டுகிறார். பிறகு ரோகிணி கழுத்தில் தாலி செயினை போட்டுவிட்டு விஜயா மற்றும் அண்ணாமலை இடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள். அடுத்ததாக மனோஜ் அம்மாவிற்கு வாங்கிட்டு வந்த புடவையை கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரோகினிக்கும் நிறைய டிரஸ் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கிறார்.

தற்போது மனோஜ் கையில் பணம் இல்லை என்றாலும் அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டு மூலம் ஓவர் செலவு செய்து கடனுக்கு மேல் கடன் வாங்குகிறார். கடைசியில் வட்டி மொத்தமாக சேர்ந்து அவரிடம் இருக்கும் ஷோரூமே இழக்கும் அளவிற்கு நடுத்தெருவில் வந்து நிற்கப் போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News