Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் இன்னும் போன் பண்ணவில்லை என்ற வருத்தத்தில் ரோகினி இருக்கிறார். ஆனாலும் அந்த வீட்டில் நமக்கு யாராவது சப்போர்ட் பண்ணுவாங்களா என்று யோசித்த ரோகினி, ஸ்ருதிக்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் சுருதி யாருக்கும் சப்போர்ட் பண்ண வேண்டாம் என்ன நடக்குது என்பதை வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று ரவியிடம் சொல்லி வீட்டிற்கு வந்து விடுகிறார்.
அடுத்ததாக அண்ணாமலை, முத்துவின் பாட்டியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். பாட்டி வந்ததும் மனோஜை பிடித்து திட்டி ரோகினிக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லு என்று சொல்கிறார். அதனால் மனோஜும், ரோகினிக்கு போன் பண்ணுகிறார். ஆனால் ரோகிணி உடனே போன் எடுத்து விடக்கூடாது என்று மனோஜை சுற்ற வைக்கிறார். வேற வழி இல்லாமல் மனோஜ் தொடர்ந்து கால் பண்ணி கொண்டே இருக்கிறார்.
கடைசியில் ரோகினி போன் எடுத்து பேசுகிறார், அப்பொழுது பாட்டி வீட்டிற்கு வந்து இருக்கிறார். உன்னை வீட்டிற்கு வர சொல்கிறார் என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ரோகிணி, அப்படி என்றால் நீயா போன் பண்ணி கூப்பிடவில்லையா என்று கேட்கிறார். உடனே மனோஜ் வீட்டிற்கு வா மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி, நான் வந்தால் உங்க அம்மா என்னை எதுவும் சொல்லக்கூடாது அடிக்க கூடாது இந்த கண்டிஷனுக்கு ஓகேவா என்று கேட்கிறார்.
உடனே அந்த கண்டிஷனை பாட்டியிடம் மனோஜ் சொல்கிறார். அதற்கு பாட்டி நான் இருக்கும் பொழுது எதுவும் நடக்க விடமாட்டேன் உன் பொண்டாட்டிய வர சொல்லு என்று சொன்னதும் ரோகிணி, மனோஜிடம் என்னை அடிப்பதற்கும் திட்டத்திற்கும் உனக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் இருக்கிறது. மற்ற யாரும் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று மனோஜிடம் தெனாவட்டாக சொல்கிறார்.
அடுத்ததாக அண்ணாமலையை விட்டு விஜயாவை போன் பண்ணி வர சொல்கிறார். அதற்கு விஜயா நான் கூட்டிட்டு வந்த மருமகள் தப்பு பண்ணி இருக்கிறாள் பொய் சொல்லி இருக்கிறாள். அதனால் கண்டிக்கும் உரிமை இருக்கிறது, அந்த கோபத்தை நான் வந்து காட்டுவேன் என்று சொல்லி விஜயாவும் வீட்டுக்கு வருகிறார். பிறகு ரோகிணி வருவதை பார்த்ததும் விஜயா ஆக்ரோஷத்தில் அடித்து ஏன் பொய் சொன்ன என்று கேட்கிறார். இதை பார்த்த மனோஜ், விஜயாவை பார்த்து அவளை அடிக்க வேண்டாம் நிறுத்து என்று வாய் திறந்து பேசுகிறார்.
அப்பொழுது ரோகினி சந்தோஷத்தில் மனோஜை பார்க்கிறார், உடனே விஜயா ஏன் நான் அவளை அடிக்க கூடாது என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் எனக்கு எல்லா உண்மையும் தெரியும் என்று பொய் சொல்லி ரோகிணிக்காக வக்காலத்து வாங்கி விஜயாவிடம் பேசுகிறார். அதற்கு விஜயா, நீயும் பொய் சொல்கிறாய் உனக்கு தெரியாது என்று எனக்கு தெரியும் என சொல்லி மனோஜை வெளுத்து வாங்குகிறார்.
ஆக மொத்தத்தில் ரோகிணி எதிர்பார்த்தபடி மனோஜ் தற்போது விஜயாவை எதிர்த்து ரோகினிக்கு சப்போர்ட் ஆக பேச ஆரம்பித்து விட்டார். ஆனாலும் இனி எந்த உண்மையையும் நான் மறைக்க மாட்டேன், வேற எந்த ரகசியமும் இல்லை என்று பொய் சொல்லும் ரோகிணி அடுத்து விஜயாவிடம் சிக்கிக் கொண்டு சித்திரவதையை அனுபவிக்கப் போகிறார். இதுவரை மீனா மட்டும்தான் அந்த வீட்டின் வேலைக்காரியாகவும் பாவப்பட்ட ஜென்மமாக பரிதாபமாக இருந்தார். தற்போது இந்த லிஸ்டில் ரோகினியும் சேரப் போகிறார் என்பதற்கு ஏற்ப விஜயா, ரோகினியை ஆட்டிப்படைக்க போகிறார்.