ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மனோஜ் சொன்ன ஒத்த வார்த்தை அரண்டு போன விஜயா.. முத்துவை காப்பாற்ற வரும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து எதேர்ச்சியாக சொன்ன ஒரு வார்த்தை மீனாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. இதனால் வெறுத்துப் போன மீனா யாரிடமும் சொல்லாமல் வெளியே போய்விட்டார். ஆனால் நிச்சயமாக குடும்பத்தில் இருப்பவர்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக போயிருக்க மாட்டார்.

விஜயாவை பயமுறுத்திய மனோஜ்

மன நிம்மதியை தேடி கோவிலுக்கு தான் போயிருப்பார். நேரம் போனது தெரியாமல் அங்கே இருந்திருக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் அதற்குள் மீனாவை காணும் என்று முத்து பதறிப்போய் ஒவ்வொரு இடமாக தேடி வருகிறார். அதிலும் அந்த கந்துவட்டிக்காரர் வந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவருடைய வீட்டிற்கு போய் முத்து சண்டை போடுகிறார்.

ஆனால் கந்துவட்டிக்காரர் எதுவும் பண்ணவில்லை என்று தெரிந்ததும் இதற்கு மேலேயும் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க முடிவு பண்ணி விட்டார். அடுத்து சத்யா வீட்டிற்கு ஃபோன் பண்ணி மீனா அக்கா வந்தாச்சா என்று கேட்கிறார். அதற்கு தங்கச்சி இல்லை என்று சொன்னதும் சத்யா இன்னும் வரவில்லையா என்று யோசிக்கிறார்.

இதை கேட்ட லோக்கல் ரவுடி சிட்டி, இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய மாமா முத்துவாக தான் இருக்கும். அவன் தான் ஏதாவது குடித்துவிட்டு பிரச்சினை பண்ணி இருப்பான். அதனால்தான் யாரிடமும் சொல்லாமல் போய் இருப்பார். உடனே அக்காவை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்கள் மாமா முத்துவின் மீது போலீஸ் கம்பளைண்ட் கொடு என்று சத்யாவை ஏற்றி விடுகிறார்.

சத்யாவும் போலீஸ் ஸ்டேஷனில் முத்து மீது கமெண்ட் கொடுத்துட்டு இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவும் மீனாவை காணவில்லை என்று அங்கே வருகிறார். பிறகு முத்துவை பார்த்த மீனாவின் தம்பி இவர்தான் எங்க அக்காவை ஏதாவது பண்ணி இருப்பார் என்று ஆவேசத்தில் குதிக்கிறார்.

உடனே போலீஸ் ஸ்டேஷன் என்று கூட யோசிக்காமல் முத்து உன்ன சாகடித்துவேன் என்று கொலை மிரட்டல் கொடுக்கிறார். இதை பார்த்து போலீஸ் முத்து மீது தான் ஏதாவது தவறு இருக்கும் என்று அவரை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில் மீனாவை காணவில்லை என்று அண்ணாமலை ரொம்பவே பதற்றத்துடன் இருக்கிறார்.

பிறகு மனோஜ், விஜயாவை கூப்பிட்டு நீ தான் கடைசியா மீனாவை ஏதோ சொல்லி இருக்கிறாய். அதனால் என்னுடைய சாவுக்கு காரணம் நீதான் என்று உன் பெயர்தான் லெட்டர்ல எழுதி வைத்துவிட்டு போய் இருப்பார். கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்று பயமுறுத்துகிறார். உடனே விஜயா ஏன் இப்படி எல்லாம் சொல்கிறாய் என்று கேட்க, அதற்கு மனோஜ் அவங்க வீட்ல இதெல்லாம் புதுசு கிடையாது.

ஏற்கனவே அவங்க அப்பா இப்படித்தான் குடும்பப் பிரச்சினை காரணமாக தண்டவாளத்தில் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதே மாதிரி மீனாவும் ஏதாவது முடிவெடுத்தால் நீ தான் மாட்டிக்கொள்வ என்று பயமுறுத்துகிறார். இதைக் கேட்ட விஜயா அரண்டு போய் பயத்தில் நிற்கிறார். ஆனால் மீனாவிற்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்து விடுகிறார். கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வீட்டிற்கு வரும் முத்து மீனாவை பார்த்ததும் ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார்.

சிறகடிக்கும் சீரியலின் சுவாரசியமான நிகழ்வு

Trending News