புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சிவாஜி பார்த்து பொறாமைப்பட்ட மனோரமா.. நிறைவேறாத கடைசி ஆசை

Manorama was jealous of Shivaji: கோலிவுட்டின் நடிப்பு சக்கரவர்த்தியான சிவாஜி கணேசன் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதரும் கூட. அதேபோல் தான் சிவாஜியுடன் நிறைய படங்களில் இணைந்து நடித்தவர் நகைச்சுவை நடிகை ஆச்சி மனோரமா. இவரை பெண் சிவாஜி என்றும் அழைத்தனர்.

ஆனால் சிவாஜி செய்யும் செயலைப் பார்த்து மனோரமா ஒரு கட்டத்தில் பொறாமை பட்டு அவரிடமே தன்னுடைய கடைசி ஆசையையும் சொல்லி இருக்கிறார். ஆனால் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போனது. திடீரென்று மனோரமாவின் அம்மா இறந்து போய்விட்டார். என்ன செய்வது, யாரிடம் சொல்வது, யாரும் இல்லாமல் சிவாஜி கிட்ட போய் மனோரமா இந்த விஷயத்தை சொன்னார்.

உடனே சிவாஜி மற்றும் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமே மனோரமா வீட்டுக்கு வந்து விட்டனர். மனோரமாவுக்கு யாரும் இல்லை என தெரிந்ததும் அவரிடம் சென்று, நான் இருக்கிறேன் என சொல்லியதுடன் சிவாஜி தான் எல்லாத்தையும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்.

Also Read: முதன்முதலாக கமலை டான்ஸ் மாஸ்டராக்கி அழகு பார்த்த நடிகை.. 18 வயதில் செய்த சாதனை

மனோரமாவின் கடைசி ஆசை

மனோரமாவின் அம்மாவிற்கு மகனாக என்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்தார். மனோரமாவின் அம்மாவை குளிப்பாட்டி, இறுதி சடங்கு சம்பிரதாயத்தையும் அவரே தன்னுடைய கையால் செய்தார். இதை பார்த்த மனோரமா ரொம்பவே சந்தோஷப்பட்டதுடன், அவருக்கு பொறாமையும் ஏற்பட்டு விட்டது.

சிவாஜி இதையெல்லாம் செய்வதை பார்த்ததும் மனோரமா, ‘இன்று நான் செத்து போய் இருக்க கூடாதா! என்று பேசி இருக்கிறார். தன்னுடைய அம்மாவிற்கு சிவாஜி இறுதிச் சடங்கு செய்தது போல் தனக்கும் செய்ய வேண்டும் என்பதுதான் மனோரமாவின் கடைசி ஆசையாக இருந்தது.

மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை சகோதரர் என்ற முறையில் எல்லா வேலைகளையும் பார்த்தவர் சிவாஜி கணேசன் தான். இதனால் தான் சிவாஜியை மனோரமா வாய் நிறைய அண்ணே! என்று அழைப்பார். கடைசி வரை மனோரமாவிற்கு சிவாஜி சப்போட்டாக இருந்தார். ஆனால் மனோரமாவிற்கு முன்னாடியே சிவாஜி இறந்து போய் விட்டார். அதனால் மனோரமாவின் கடைசி ஆசை நிறைவேறாமலே போனது.

Also Read: பிரபுவின் பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு.. அன்னை இல்லம், சாந்தி தியேட்டர் என குவித்த சிவாஜி

Trending News