செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மனோரமா நடிப்பில் பட்டையை கிளப்பிய 8 கேரக்டர்கள்.. வில்லத்தனத்திலும் முத்திரை பதித்த ஆச்சி

நடிகை மனோரமா சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். கோபி சாந்தாவாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிய இவர், இன்று ஆச்சி மனோரமாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். மனோரமா தமிழ் சினிமாவில் பண்ணாத கேரக்டர்களை இல்லை. இருந்தாலும் இந்த எட்டு கேரக்டர்கள் இவரை தவிர வேறு யார் பண்ணியிருந்தாலும் எடுபட்டு இருக்காது. அந்த அளவுக்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆச்சி மனோரமா.

சம்சாரம் அது மின்சாரம் – கண்ணம்மா: இயக்குனர் விசு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்த படத்தில் விசுவின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கண்ணம்மாவாக மனோரமா நடித்திருப்பார். இதில் நடிகர் கிஷ்முவுடன் மனோரமா காம்பினேஷனில் வந்த காட்சி இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

Also Read:மனோரமா இடத்தை பிடிக்க வந்த 5 நடிகைகள்.. கடைசி வரை அசைக்க முடியாமல் ஆட்சி செய்த ஆச்சி

நடிகன்-பேபிம்மா: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி நடித்த திரைப்படம் நடிகன். இவர்கள் இருவரது காம்போவை யாராலும் மிஞ்சிவிட முடியாது என்று இருந்த காலகட்டத்தில் இந்த படத்தில் சத்யராஜை காதலிப்பதாக வரும் பேபிம்மா கேரக்டர் இவர்கள் இருவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

நாட்டாமை- தாய்க்கிழவி: இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நாட்டாமை. இந்த படத்தில் வந்த தாய் கிழவி என்னும் வார்த்தை இன்றுவரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறது. நாட்டாமை படத்தின் கிளைமாக்ஸ் சீனில் சரத்குமார் தப்பாக தீர்ப்பு சொல்லி விட்டதாக மனோரமா சொல்லும் காட்சி, சரத்குமார் இறந்த பிறகு அவர் அழும் காட்சி இன்று வரை படம் பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்த்துப் போகும் அளவுக்கு இருக்கும்.

சின்னக்கவுண்டர் – சின்னக்கவுண்டரின் அம்மா: கேப்டன் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படத்தில் அவரின் அம்மாவாக மனோரமா நடித்திருப்பார். இதில் மனோரமா மற்றும் சுகன்யாவுக்கு இடையில் வரும் காமெடி காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும். அதே நேரத்தில் விஜயகாந்த் மற்றும் மனோரமாவிற்கு இடையேயான சென்டிமென்ட் காட்சியும் உணர்வுபூர்வமாக இருக்கும்.

Also Read:3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை.. மனோரமாவுக்கு அடுத்தபடியாக சினிமாவை ஆட்சி செய்தவர்

நான் பெத்த மகனே- ஆண்டாள் : மனோரமா முழுக்க நெகட்டிவ் ரோல் பண்ணிய திரைப்படங்களில் ஒன்று நான் பெத்த மகனே. தன் ஒரே திருமணத்திற்கு பிறகு மருமகளை முற்றிலும் வெறுக்கும் மாமியாராக வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். மகனின் மீதான பாசம் மற்றும் மருமகளின் மீதான கோபம் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருப்பார்.

சின்னத்தம்பி- கண்ணம்மா: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த வெள்ளி விழா கண்ட திரைப்படம் சின்னத்தம்பி. இந்த படத்தில் மனோரமா, பிரபுவின் அம்மாவாக முழுக்க முழுக்க சீரியஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

தில்லானா மோகனாம்பாள்- ஜில் ஜில் ரமாமணி: நடிகர் திலகம் சிவாஜி கணேசனே நடிக்க பயப்படும் ஒரு கேரக்டர் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றால் அது மனோரமா தான். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சிவாஜியிடம் ‘உங்க நாயனத்திலிருந்து மட்டும் தான் இந்த சத்தம் கேட்குதா’ என வெள்ளந்தியாக கேட்கும் ஜில் ஜில் ரமாமணி, நடிப்பில் மிரளவிட்டிருந்தார்.

பாட்டி சொல்லைத் தட்டாதே- கண்ணாத்தா: பாண்டியராஜ் மற்றும் ஊர்வசி நடித்த பாட்டி சொல்ல தட்டாதே என்னும் திரைப்படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகியே மனோரமா தான். இந்த படத்தில் இவர் பாடிய டில்லிக்கு ராஜானாலும் என்ற பாட்டு மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

Also Read:மனோரமாவிற்கு பின் 750 படங்களில் நடித்த ஒரே நடிகை.. 60 வயதில் தேசிய விருதுக்காக எடுத்த புது அவதாரம்

Trending News