வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

4000 டான்ஸர், புகை பிடித்தல், மது என மொத்த சீக்ரெட்டையும் உடைத்த மன்சூர் அலிகான்.. தலை முடியை பிச்சிக்கும் லோகேஷ்

Actor Mansoor Ali Khan: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யும் முன்னணி இயக்குனராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜும் சேர்ந்து செய்துள்ள சம்பவம் தான் லியோ. இந்த படத்தின் அப்டேட்டுகளை பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார் லோகேஷ். ஆனால் அந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சில பேட்டியில் தொகுப்பாளர்களின் எடக்கு முடக்கான கேள்விகளால் லியோ படத்தின் சீக்ரெட்டை உலறிவிடுகிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் நடித்துள்ளவர்கள் லியோ பட ரிலீஸ் வரை எந்த பேட்டியும் அளிக்கக்கூடாது என லோகேஷ் ஸ்டிட்டாக கண்டிஷன் போட்டிருக்கும் நிலையில், அதை மன்சூர் அலிகான் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியில் தளபதி விஜய் மற்றும் லியோ படத்தை பற்றி பல சீக்ரெட்டை உடைதெறிந்துள்ளார்.

Also Read: தரமான படங்கள் 5 கொடுத்தாலும் ஜெயிக்க முடியாத கதிர்.. லோகேஷை மலை போல நம்பி இருக்கும் பிகில் கோச்

இதை எப்படி சமாளிக்கிறது என்று தெரியாமல் லோகேஷ் தலையை பிச்சுக்கும் நிலைக்கு வந்துள்ளார். மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியில், ‘தளபதி விஜய் இந்த உயரத்திற்கு வளர்வதற்கு முக்கியமான காரணம் நிச்சயம் அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏசி அவர்களின் கடுமையான உழைப்புதான். எஸ்ஏசியின் ஆரம்பகால ஆதரவும், விஜய்க்கு சினிமா மீது இருந்த ஆர்வமும் தளபதியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

விஜய் தனது முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இப்போதும் லியோ படத்தில் இருக்கிறார். அவர் மாறவே இல்லை. லியோ படத்தில் 3000- 4000 நடன கலைஞர்கள் மற்றும் பைட்டர்ஸ் இணைந்து படத்தின் பிரம்மாண்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். இதெல்லாம் லோகேஷ் ஆல் மட்டுமே சாத்தியமாக்க முடியும்.

Also Read: தலைவர் 171ல் கண்டிப்பாக இந்த 4 நடிகர்களும் இருக்க வேண்டும்.. சும்மாவே ஆடும் லோகேஷுக்கு சலங்கை கட்டிவிட்ட ரஜினி

மேலும் லியோ படத்தில் புகைபிடிப்பது, மது அருந்தும் காட்சிகள் நிரம்பிக் கிடக்கிறது. இதுகுறித்து பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் சினிமாவில் இருந்து இந்த கூறுகளை நீக்க விரும்பினால், விற்பனை செய்வதை நிறுத்துங்கள்’ என்றும் மன்சூர் அலிகான் விலாசி இருக்கிறார். அதுமட்டுமல்ல லோகேஷ் மற்றும் விஜய் இருவரின் கடினமான உழைப்புதான் லியோ. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இப்படம் இருக்கும் என்று மன்சூர் அலிகான் லியோ படத்தின் மொத்த சீக்ரெட்டையும் போட்டு உடைத்திருக்கிறார்.

லோகேஷ் தன்னுடைய படத்தில் ஒரு சில பிரபலங்களை சஸ்பென்ஸாக வைத்திருப்பார். அப்போதுதான் படத்தை பார்ப்போருக்கு ஒரு விதமான ஆச்சரியம் ஏற்படும். விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரை மறைத்து வைத்திருந்தார். அதேபோல்தான் லியோ படத்திலும் ஒரு சில கதாபாத்திரங்களை மறைத்து வைத்திருக்கிறார். ஆனால் மன்சூர் அலிகான் அதை புரிந்து கொள்ளாமல் சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் படத்தில் இருப்பதை உளறிவிட்டார். இதையே எப்படி சமாளிப்பது என தெரியாமல் இருந்த லோகேஷுக்கு இப்போது படத்தை குறித்த முழு சீக்ரெட்டையும் மன்சூர் அலிகான் உடைத்திருப்பதால் செம டென்ஷனில் இருக்கிறார்.

Also Read: ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்குதோ இல்லையோ, தளபதி 68 உறுதி.. 2 பெரிய கையை வளைத்து போட்ட வெங்கட் பிரபு

Trending News