திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திமிராக மல்லு கட்டிய மன்சூர் அலிகான்.. பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கட்டும் என விரட்டியடித்த பிக் பாஸ்

ஒரு காலகட்டத்தில் வில்லனாக மிரட்டி வந்த மன்சூர் அலிகான் தற்போது காமெடி அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அரசியல் ஆசை கொண்டு கடந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் குறைந்த வாக்குகள் பெற்று தேர்தலில் தோல்வி அடைந்தார். மன்சூர் அலிகான் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக் கூடியவர்.

இதனால் இவரது பேச்சு அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் மன்சூர் அலிகான் கலந்துகொண்டு அதகளம் செய்துள்ளார். அதாவது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு இந்த தொலைக்காட்சியில் ராஜு வீட்டில பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read :அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. போட்டியாளரிடம் கெஞ்சும் விஜய் டிவி

இதில் வந்த மன்சூர் அலிகான் பல சில்மிஷ வேலைகள் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து இருந்த வரை டிஆர்பி நல்ல ரேட்டிங் பெற்று வந்தது.

ஆனால் அவர் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் இந்நிகழ்ச்சி தற்போது டல் அடித்துவிட்டது. மீண்டும் பிக் பாஸ் சீசன் 6 சூடு பிடிக்க வேண்டும் என்றால் தரமான ஆளை இறக்க வேண்டும். இதனால் மன்சூர் அலிகான் இடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

Also Read :ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

அப்போது மன்சூர் அலிகான் போட்ட சில கண்டிஷனால் திக்குமுக்காடியது விஜய் டிவி. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொள்ள வேண்டும் என்றால் பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார். இது கூட பரவாயில்லை பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி நான் என்ன வேண்டாலும் பேசுவேன், எனக்கு மனதில் எதுபட்டதோ அதை வெளிப்படையாக பேசுவேன், என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இவ்வாறு சில ஏட்டிக்கு போட்டியான விஷயங்களை மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதற்குப் பருத்திமூட்ட பேசாம குடோனில் இருந்திடலாம் என கும்பிடு போட்டு மன்சூர் அலிகானை விஜய் டிவி விரட்டி அடித்துள்ளது.

Also Read :ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. 14 நாட்களுக்கு இவ்வளவா?

Trending News