திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மேடை நாகரிகம் தெரியாமல் திமிராக பேசும் மன்சூர்.. அவரைப்போவே இருக்கும் கண்ணாடி நடிகர்

Mansoor Alikhan: 90ஸ் கிட்ஸ் இடம் கொடூரமான வில்லன் யார் என்று கேட்டால் அவர்கள் முதலில் சொல்வது மன்சூர் அலிகானை தான். அந்த அளவிற்கு பல படங்களில் மோசமான கேரக்டரில் நடித்து பயமுறுத்தி இருப்பார். அப்படிப்பட்ட இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய்யுடன் மறுபடியும் லியோ படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.

இதுவரை விஜய் படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த இவர், லியோ படத்தில் எந்த மாதிரி கேரக்டர் என்று பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் இரண்டு பேரின் காம்பினேஷன் பார்க்க நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட மன்சூர் அலிகான் பொது இடங்களில் என்ன பேசுகிறோம் எந்த மாதிரி நடந்து கொள்கிறோம் என்று மேடை நாகரிகம் தெரியாமலேயே திமிராக பேசக்கூடியவர்.

Also read: ஒரே ஒரு போன் தான், ஓடோடி வந்த விஜயகாந்த்.. பழசை மறந்த விஜய், குத்தி காட்டிய நடிகர்

அவரைப் பொறுத்தவரை மனதில் பட்டதை அப்படியே சொல்ல வேண்டும் என்று பல விஷயங்களை முன் வைத்து வந்திருக்கிறார். ஆனால் இவருடைய இந்த கேரக்டரால் பலரும் பாதிக்கப்பட்டு அவமானப்பட்டு இருக்கிறார்கள். இவர் பொதுவாக பேசினாலே சரக்கு அடிச்சு பேசுவது போல் கண்ணா பின்னான்னு உளறிக்கொண்டு தான் வருவார்.

அத்துடன் மேடை என்று கூட பார்க்காமல் அடிக்க கை ஓங்குவது, செருப்பை காட்டுவது, அசிங்கமான கெட்ட வார்த்தையில் பேசுவது என்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தி ஓவர் ஆட்டிட்யூட்டை காட்டியிருக்கிறார். இவர்தான் இப்படி என்றால்  இன்னொரு நடிகரும் அச்சு அசலாக இவரை பார்ப்பது போலவே பொது இடங்களில் நடந்து கொள்கிறார்.

Also read: மன்சூர் அலிகானை விட கம்மியான சம்பளம் வாங்கிய விஜய்.. ரகசியத்தை போட்டு உடைத்த வீரபத்திரன்

ஆரம்பத்தில் அவர் அமைதியாக தான் இருந்து வந்தார். போகப் போக அவருடைய குணங்கள் அனைத்தும் மாறி ஓவர் தலைக்கனத்துடன் சுற்றித் திரிகிறார். அதற்கு காரணம் அவர் இயக்கிய இரண்டு, மூணு படங்கள் ஹிட்டானதால் இந்த மாதிரி அவருடைய கேரக்டர் மாறிவிட்டது. அவர் வேறு யாரும் இல்லை சித்திரம் பேசுதடி படத்தை எடுத்த இயக்குனர் மிஷ்கின் தான்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூட ஓவர் மிதப்பில் அதிகமான கெத்துடன் சுற்றித்திரிந்து இருக்கிறார். அதில் பிரம்மாண்ட இயக்குனரை சந்தித்து ஏடாகூடமான கேள்வியை கேட்டு அவரை அசிங்கப்படுத்தி விட்டிருக்கிறார். அந்த அளவிற்கு இவருடைய பேச்சுக்கள் ஓவராக இருக்கிறது. முக்கியமாக இவர் செய்வது தவறு என்று தெரிந்தால் கூட அதற்கு எந்த இடத்திலும் மன்னிப்பு கேட்க முடியாது என கர்வத்துடன் இருந்து வருகிறார்.

Also read: 3 வருடத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின்.. நண்பனுக்காக களம் இறங்கும் ஹீரோ

Trending News