சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கயிருந்த 3 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு பதிலாக நடிக்கயிருந்த பிரபல நடிகை

விஜய் சேதுபதியின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்திற்கு முன்பு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ஆரஞ்சு மிட்டாய், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

இதனால் திரையுலகில் சரியான பிரேக் கிடைக்காமல் இருந்த விஜய் சேதுபதிக்கு கிடைத்தது தான் நானும் ரவுடிதான் என்ற ஒரு ஜாக்பாட். இந்த படத்தில் அவர் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் இதில் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.

அதிலும் காதம்பரி என்ற கேரக்டரில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்த நயன்தாராவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் பாடல்கள் முதற்கொண்டு அனைத்தும் பட்டையை கிளப்பியது. இதன் மூலம் விக்னேஷ் சிவனுக்கும் ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது.

ஆனால் இப்படி ஒரு வெற்றியை பெறுவதற்கு அவர் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். அவர் இந்த படத்தின் கதையை முதலில் கௌதம் கார்த்திக் மற்றும் நஸ்ரியா ஆகியோரிடம் தான் கூறியிருக்கிறார். கதையை கேட்ட அவர்களும் நடிக்க ஒப்புக் கொண்டனர். ஆனால் இடையில் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

பிறகு விக்னேஷ் சிவன் இந்த கதையை பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியிடம் கூறியிருக்கிறார். அவராலும் இதில் நடிக்க முடியாமல் போக இறுதியில் இந்த வாய்ப்பு ஜெய்க்கு சென்றிருக்கிறது. ஆனால் அதுவும் கைகூடவில்லை. இவர்கள் யாராலும் இந்த கதையில் அப்போது நடிக்க முடியவில்லை.

அதன் பிறகுதான் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை சந்தித்து இந்த கதையை பற்றி கூறியிருக்கிறார். நீண்டகாலமாக ஒரு வெற்றிக்காக தவித்து வந்த விஜய்சேதுபதி இந்த கதையை கேட்டவுடன் அப்படியே பிடித்துக் கொண்டார். அதன் பிறகு உருவான இந்தப் படம் விஜய் சேதுபதியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

Trending News