திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மார்ச் 15 குறி வைத்து ஓடிடியில் வெளியாகும் 18 படங்கள்.. 25 கோடி பட்ஜெட்டில் 65 கோடி வசூல் செய்து மம்முட்டி

March 15 OTT Release Movies : மார்ச் 15 இந்த வாரம் கிட்டத்தட்ட தியேட்டரை காட்டிலும் ஓடிடியில் 18 படங்கள் வெளியாகிறது. ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சுரேஷ் ரவி மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவான நந்திவர்மன் படம்  தமிழில் வெளியாகிறது.

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி

சந்தானத்தின் நகைச்சுவையான நடிப்பில் பிப்ரவரி 2 திரையரங்குகளில் வெளியானது வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் ரசிகர்களிடம் நேர்மையான விமர்சனங்களை பெற்று ஒரு அளவு நல்ல வசூலை தந்தது. இப்போது வடக்குப்பட்டி ராமசாமி படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

மிஷன் சாப்டர் ஓன்

விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு மிஷன் சாப்டர் ஒன் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளபதி வெளியாகிறது.

மம்முட்டியின் பிரமயுகம்

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மம்முட்டியின் பிரமயுகம் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் சித்தார்த் பரதன், மணிகண்டன், ஆர் ஆசாரி போன்ற பிரபலங்கள் நடித்த நிலையில் மிகப்பெரிய வசூலை பெற்றது. இப்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 65 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. 

சிக்கன் நகெட் 

கொரியன் மொழியில் உருவான சிக்கன் நகெட் படத்தில் சோய் சன் மேனன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனது மகனை மனித உருவத்தில் மீட்டெடுப்பதற்காக செய்யும் சுவாரசியமான கதை களத்தை கொண்டிருக்கிறது. இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

மற்றமொழி படங்கள்

மலையாளத்தில் ஆட்டம் படம் அமேசான் பிரைம், பாலிவுட்டில் உருவான ஹனுமன் படம் ஜியோ சினிமா, மர்டர் முபாரக், ஆங்கிலத்தில் உருவான டர்னிங் பாயிண்ட்ஸ் மற்றும் ஈரிஸ் விஷ் ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 

Trending News