Mariselvaraj and Rajini: இயக்குனர்கள் இயக்கக்கூடிய படங்கள் மக்களை கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படங்களை இயக்குவார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட்டு தன் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் மக்களுக்கு கண்முன்னே காட்ட வேண்டும். அதன் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மெனக்கெடு செய்வார்கள்.
அந்த வகையில் ஒருவராக இயக்குனர் மாரி செல்வராஜ் இடம் பிடித்திருக்கிறார். இவர் இயக்கக்கூடிய படங்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வித்தியாசமான கதைகளை வைத்து படமாக்க கூடியவர். அதனால் தான் இவர் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியினரை மேன்மைப்படுத்தும் விதமாக கொண்டு வந்தார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
தலைவருக்காக வெயிட்டிங்கில் மாரி செல்வராஜ்
இதனைத் தொடர்ந்து தனுசுடன் கர்ணன் மற்றும் உதயநிதியை வைத்து மாமன்னன் போன்ற படங்களின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து இந்த மாதிரி படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் கொடுத்த ஒரு பேட்டியில், தான் எடுக்கக்கூடிய படங்கள் வித்தியாசமாகவும், அதைக் கொண்டு போகும் ஸ்டைலும் சிறந்ததாக இருக்கிறது என்று ரஜினி கூப்பிட்டு பாராட்டியதாக கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நான் எடுத்த ஒவ்வொரு படத்திற்கு பிறகும் ரஜினி கூப்பிட்டு என்னை பாராட்டி பேசுவார். அந்த அளவிற்கு என்னுடைய ஸ்டைல் அவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.
அதனால் தற்போது நான் கமிட்டாகி இருக்கும் படத்தை எல்லாம் முடித்துவிட்டு ரஜினியுடன் கூட்டணி வைத்து அவருக்கு தகுந்த மாதிரி ஒரு கதையை கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்துவேன் என்று கூறியிருக்கிறார். அதனால் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் இந்த மாதம் 23ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை மாரி செல்வராஜ் தயாரிக்கவும் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் பைசன் படம் உருவாகி வருகிறது. அடுத்ததாக கர்ணன் கூட்டணி உடன் மறுபடியும் இணையும் விதமாக தனுசுக்கு ஒரு கதையை தயார் பண்ணி வைத்திருக்கிறார். அந்த வகையில் அடுத்ததாக தனுஷ் வைத்து இயக்கப் போகிறார்.
இதற்கிடையில் ரஜினி கமிட் ஆகியுள்ள வேட்டையன் மற்றும் கூலி படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைய போகிறார். இப்படம் ரஜினி மற்றும் மாரி செல்வராஜ் கேரியரில் மறக்க முடியாத திரைப்படம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Rajinikanth: பேரனின் பிறந்த நாளை தடபடலாக கொண்டாடிய ரஜினிகாந்த்
- Rajini : கூலி படத்தில் ரஜினி, லோகேஷின் சம்பளம்
- 73 வயது ரஜினிக்கு 45 வயது நடிகை மனைவியா