வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஷ செடியாக வளர்ந்து வரும் மாரி செல்வராஜ் திட்டங்கள்.. படம் மூலமாக திணிக்க நினைக்கும் நரி மூளை

Director Mariselvaraj: மாரி செல்வராஜ் இயக்கக்கூடிய படங்கள் எப்படி இருக்கும் என்று அவர் எடுத்த முதல் படத்தின் மூலமே நமக்கு புரிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எடுத்த கர்ணன் மற்றும் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் படங்களும் அதே டிராக்கில் தான் எடுத்திருக்கிறார். இவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் தீர்க்கும் விதமாக அனைத்தையும் படத்தின் மூலம் கொட்டி தீர்த்து விடுகிறார்.

அது மட்டுமில்லாமல் எதார்த்தமாக எடுக்கிறேன் என்பதற்காக முகம் சுளிக்கிற அளவுக்கு சில காட்சிகள் இருக்கிறது. அத்துடன் இவர் இயக்கிய மூன்று படங்களுமே விலங்குகளை மையமாக வைத்து தான் எடுத்திருக்கிறார். அது என்ன காரணம் என்பது தற்போது இவர் அளித்த பேட்டியில் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய வீட்டில் பூஜை அறையை கிடையாதாம்.

Also read: மாமன்னன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்.. உதயநிதியை ஓவர்டேக் செய்த மாரி செல்வராஜ்

இவர் கடவுளை கும்பிடுவதே இல்லையாம், அதற்கு பதிலாக வீடு முழுவதும் பன்றிகளின் புகைப்படத்தை தான் மாட்டி வைத்திருப்பாராம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் உதயநிதி,  மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்பொழுது அந்த புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

இதை பற்றி மாரி செல்வராஜிடம் உதயநிதி கேட்டதற்கு எனக்கு பன்றிகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் அதை தான் என்னுடைய தெய்வமாக நான் வணங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் தான் மாமன்னன் படத்தில் பன்றிகளை வைத்து காட்சிகளை அமைத்து உதயநிதி ரொம்பவே ரசித்து பேசும் படி கதையே அமைத்திருக்கிறார்.

Also read: உதயநிதிக்காக தலையை கொடுத்து அவமானப்பட்ட பிரபலம்.. கூட இருந்து குழி வெட்டிய மாரி செல்வராஜ்

அத்துடன் படத்தில் பன்றிகளை பற்றி உதயநிதி பேசிய அனைத்து டயலாக்குமே தினம்தோறும் மாறி செல்வராஜ் பேசின விஷயங்களை தான் அவரைப் பேச வைத்திருக்கிறார். இது ஒரு விதத்தில் நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்காக எல்லா படங்களிலும் இப்படியே இவருடைய கொள்கைகளை கொண்டு வந்து பார்ப்பவர்களை ஏன் டென்ஷன் படுத்த வேண்டும்.

உங்களுக்கு பிடிக்கும் என்றால் பூஜை அறையில் வைத்து கும்பிடுங்கள் அல்லது வீட்டில் நிறைய பன்றிகளை வளர்த்துக்கொண்டு வாருங்கள். அதை விட்டுட்டு படத்தின் மூலம் இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் வடிவமைத்து பார்ப்பவர்களை ஏன் கடுப்பேற்ற வேண்டும். இவருடைய கதையின் படி மேல் இருப்பவர்கள் அனைவரும் அவரது விஷயங்களை கீழ் உள்ளவர்களிடம் திணித்து கஷ்டப்படுத்துகிறார்கள் என்பதை தான் சொல்லி வருகிறார்.

ஆனால் தற்போது இவர் படத்தின் மூலம் தேவையில்லாத கருத்துக்களை பார்ப்பவர்களுக்கு திணிக்கும் விஷச் செடியாக வளர்ந்து வருகிறார். இதுதான் நீங்கள் பயன்படுத்தும் நரியின் மூளையா. இனிமேலும் தொடர்ந்து இதே மாதிரி கதையை கொண்டு வந்து எங்களை பலிக்காடாக ஆக்காதீர்கள் என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது எழும்பி வருகிறது.

Also read: அடுத்த தலைமுறை ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்.. மாமன்னனில் கவனிக்கப்பட வேண்டிய 3 விஷயங்கள்

Trending News