Vaazhai Collection: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. தன் சிறு வயதில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி கதையை கொண்டு சென்றுள்ள அவர் ஆடியன்ஸை இதன் மூலம் கண்கலங்க வைத்துள்ளார்.
குடும்ப கஷ்டத்தின் காரணமாக வேண்டா வெறுப்பாக வாழை காய்களை சுமந்து செல்லும் சிறுவனுக்கு அது பிடிக்கவில்லை. ஒரு நாள் அவன் காய் சுமக்க செல்லாமல் பள்ளிக்கு சென்று விடுகிறான். அதனால் ஏற்பட்ட சம்பவமும் விளைவுகளும் தான் படத்தின் கிளைமேக்ஸ்.
மனதை ரணமாக்க கூடிய வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதை தற்போது அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. கொஞ்சம் அதிகப்படியாக காட்சிகள் இருக்கிறதோ என்று நினைத்தாலும் இது ஏதோ ஒரு இடத்தில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
வாழை 2வது நாள் வசூல்
அதனாலேயே படத்தை பார்த்த இயக்குனர்கள் பாலா, பாரதிராஜா என அனைவரும் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளனர். இது பெரும் பிரமோஷன் ஆக மாறிய நிலையில் படத்தின் வசூலும் ஏறுமுகமாக இருக்கிறது.
அதன்படி படம் வெளியான முதல் நாளிலேயே 1.3 கோடிகளை வசூலித்திருந்தது. அதை அடுத்து இரண்டாவது நாளான நேற்று 2.5 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது அதேபோல் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஸ்கிரீன்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமையான இன்று எல்லா இடங்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் ரசிகர்களின் வரவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வசூலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த
கொட்டுக்காளி வெளியானது. அப்படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் கிடைத்தது. ஆனால் வாழை படத்தை ஒப்பிட்டு பார்க்கையில் கொட்டுக்காளி கொஞ்சம் டல் தான்.
வசூல் வேட்டையாடும் மாரி செல்வராஜின் வாழை
- கொட்டுக்காளி இரண்டாவது நாள் கலெக்ஷன்
- ஜெயித்தது யாரு.? வாழை, கொட்டுக்காளி முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
- பாலா கட்டிப்பிடித்து கண் கலங்கிய வாழை எப்படி இருக்கு.?