Vaazhai Trailer: பொதுவாக மாரி செல்வராஜின் படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும். அவர்களின் வாழ்வியலையும் வலி வேதனை ஆகியவற்றை எதார்த்தமாக தன் படைப்புகளில் அவர் வெளிப்படுத்தி இருப்பார்.
அப்படி அவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் அதிக கவனம் பெற்றது. அந்த வரிசையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதன்படி உண்மை சம்பவத்தின் பிரதிபலிப்பாக இப்படம் இருக்கிறது. ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே காய் சுமை இந்த ஊரில் மட்டும் தான் இருக்கா இல்ல உலகம் முழுக்க இருக்கா என்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது.
வாழை ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
வேற எங்கேயும் இல்லேன்னா காய் சுமை இல்லாத ஊரா பார்த்து ஓடிப் போயிடலாம் என ஒரு சிறுவன் வலியோடு கூறுகிறான். அதை அடுத்து பகுதி நேரமாக வேலை செய்ய சொல்லும் அம்மாவிடம் கோபப்படும் சிறுவன் அவனுடைய மகிழ்ச்சியான பள்ளி வாழ்வு என ட்ரைலர் தொடர்கிறது.
அதேபோல் வாழைத்தார்களை சுமந்து செல்லும் மக்கள், ஊர் பிரச்சனை என ஆதிக்க அரசியலையும் ட்ரெய்லர் காட்டுகிறது. அதில் கடைசியாக சிறுவன் கிணற்றில் குதிப்பதோடு காட்சிகள் முடிகிறது.
இப்படி எதார்த்தமான சம்பவங்களை வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். அவருடைய முந்தைய படங்களைப் போலவே இந்த வாழையும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் வாழை
- கடவுள் மாதிரி வந்து காப்பாற்றிய மாரி செல்வராஜ்
- கங்குவாவுக்கு மரண பயத்தை காட்டிய வேட்டையன்
- ரஜினியை வைத்து இயக்கப் போகும் மாரி செல்வராஜ்