புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இறுதிகட்ட படப்பிடிப்பில் மார்க் ஆண்டனி.. வித்தியாசமான லுக்கில் விஷால், எஸ்ஜே சூர்யா

சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக வெளியான லத்தி படம் ஓரளவு நல்ல விமர்சனங்கள் கொடுத்தாலும் விஷாலுக்கு வெற்றி படமாக அமையவில்லை. இப்போது விஷால் தன்னுடைய 33வது படமான மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.

Also Read : புரட்சி செய்ய புறப்பட்ட புரட்சித் தளபதி.. எம்ஜிஆர் ரசிகர்களை பிடிக்க, விஷால் செய்யும் சேட்டை

இந்நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் விஷால், எஸ் ஜே சூர்யா மற்றும் சுனில் ஆகியோர் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் இவர்களின் கெட்டப்பை பார்க்கும் போது வித்யாசமாக உள்ளது.

இந்த போஸ்டரில் விஷால் நீண்ட தாடியுடன், நெற்றியில் பட்டையுடன் காணப்படுகிறார். அதேபோல் எஸ் ஜே சூர்யா மூக்கு கண்ணாடி அணிந்தபடி நீண்ட மீசையுடன் இருக்கிறார். மேலும் இறுதிகட்ட படபிடிப்பில் மார்க் ஆண்டனி என்று பதிவிடப்பட்டுள்ளது. ஆகையால் இன்னும் சில நாட்களில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது.

Also Read : ஆருயிர், ஓருயிர்களுக்கு இடையே வந்த பிளவு.. ஒரே படத்தால் விஷால் கூட்டணிக்குள் வந்த அடிதடி

ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி விஷால் மார்க் ஆண்டனி படத்தை பெரிதும் நம்பி இருக்கிறாராம். இந்த படம் கொடுக்கும் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் விஷால் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Mark-Antony

Also Read : அடி மேல் அடிவாங்கும் விஷால், விஜய் சேதுபதி.. கழட்டி விட தயாரான தயாரிப்பாளர்கள்

Trending News