வந்தால் பல கோடி இல்லனா தெருக்கோடி.. விஷாலை நம்பி மோசம் போனதால் சட்டையை பிடித்த தயாரிப்பாளர்

Vishaal – Mark Antony Movie: பல வருடங்களாக ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் தான் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சொல்லப் போனால் இந்த படத்தில் இருந்து தான் விஷாலுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் இந்த படம் கோடிக்கணக்கில் வசூலை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வினோத்குமார் தயாரித்த இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஷாலை விட எஸ் ஜே சூர்யா அதிகமாக ஸ்கோர் செய்து விட்டார். இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷால், ஒரு படத்தில் நடிக்கும் போது நான் மட்டுமே கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று நினைக்கிற ஆள் நான் இல்லை. எல்லோருமே கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று தான் நான் நினைப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:4 கோடி காசு வச்சுட்டு வராதீங்க, தயாரிப்பாளரா கதறிய விஷால்.. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல

இப்படி எதிர்பாராத வெற்றி கிடைத்தவுடன் பழம் போல் பேசும் விஷால் படப்பிடிப்பின் போது தான் பயங்கர அக்கப்போர் செய்திருக்கிறார். ஏற்கனவே விஷால் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு அவர் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்பதுதான். இதுதான் அவருடைய கடந்த கால தோல்விக்கும் காரணம்.

நடிகர் விஷால் பழைய குருடி கதவை தொறடி என்பது போல் மார்க் ஆண்டனி படப்பிடிப்பிலும் இதே வேலையை தான் செய்திருக்கிறார். விஷாலை நம்பி கோடிக்கணக்கில் பணம் போட்ட தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் செம காண்டு ஆகிவிட்டாராம். நேரடியாக அவருடைய வீட்டிற்கே சென்று அவர் அப்பாவிடம் இது பற்றி பேசி புகார் செய்திருக்கிறார்.

Also Read:லட்சுமிகரமான நடிகைக்கும் விஷாலுக்கும் உள்ள உறவு.. விளக்கம் கொடுத்த மார்க் ஆண்டனி

விஷாலை பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவருடைய படங்கள் சமீப காலமாக வெற்றி பெறாததால் அவருக்கு மார்க்கெட் இல்லை என்பதை தெரிந்தும் வினோத்குமார் கோடி கணக்கில் அவர் மீது முதலீடு செய்தது எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அவர், வந்தால் கோடி இல்லையேல் தெரு கோடி என்ற மனநிலைமையில் தான் இந்த படத்தை முடித்து இருக்கிறார்.

படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் எஸ் ஜே சூர்யாவின் அபாரமான நடிப்பு இரண்டுமே சேர்ந்து படத்தை ஓஹோ என்று தூக்கிவிட்டது. தற்போதைய நிலவரப்படி மார்க் ஆண்டனி படம் கிட்டத்தட்ட 70 கோடி வசூல் செய்து விட்டது. விரைவில் இந்த படம் 100 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்டில் சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:விஷால் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வசூலில் பட்டய கிளப்பும் மார்க் ஆண்டனி, 4வது நாள் நிலவரம்