வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெங்கட் பிரபுவுடன் இணையும் மாஸ் இயக்குனர்.. லியோவை மிஞ்சும் தளபதி 68 அப்டேட்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு துவங்கும் முன்பே ரிலீஸ் தேதியுடன் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர். இப்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் போது லியோ படத்தை விட தளபதி 68 படத்தைக் குறித்த அப்டேட்தான் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் இந்த படத்தை இயக்க வேண்டும் என தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி முதல் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் என பல முன்னணி இயக்குனர்கள் வரிசை கட்டி காத்திருந்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் மட்டுமல்ல இப்போது அவருடன் இன்னொரு மாஸ் இயக்குனரும் இணைந்திருக்கிறார்.

Also Read: சுதா கொங்காராவுக்கு நடந்த சோகம்.. கையில் கட்டுடன் வெளிவந்த பரிதாபமான புகைப்படம்

கமர்சியல் படங்களை காட்டிலும் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருப்பவர்தான் இயக்குனர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை பார்த்த பிறகு விஜய்க்கு சுதா கொங்கரா உடன் இணைய வேண்டும் என நீண்ட நாட்களாகவே ஆசைப்பட்டார்.

அதனால் தான் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு மற்றும் சுதா கொங்கரா இருவரும் இயக்கட்டும் என அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதிலும் வெங்கட் பிரபு 10 வருடங்களாக விஜய்யின் படத்தை இயக்குவதற்காக காத்துக் கிடப்பவர். இவர் கலகலப்பான படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர்.

Also Read: 10 வருஷ நம்பிக்கை வீணா போகல.. தளபதி-68 இயக்குனரே உறுதியா தெரியல, ஆனா இசையமைப்பது இவரா?

அதனால் தான் தொடர்ந்து சீரியஸ் ஆன படங்களை நடித்துக் கொண்டிருக்கும் விஜய் ஒரு மாற்றத்திற்காக காமெடி ஜுனரில் தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று தளபதி 68 படத்தின் இயக்குனர்களாக வெங்கட் பிரபு மற்றும் சுதா கொங்கரா இருவரையும் தேர்வு செய்துள்ளனர்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது ஆர்பி சௌத்ரியின் சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க உள்ளது. முதலில் யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார் என்ற செய்திகள் பரவியது. ஆனால் திடீரென்று அதில் மாற்றம் ஏற்பட்டு இப்பொழுது ஜி.வி. பிரகாஷ்-க்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also Read: விஜய்யின் கண்டிஷனால் நொந்து போன வெங்கட் பிரபு.. மொத்த கனவையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே!

Trending News