Actor Vikram : விக்ரம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடிப்பை மட்டும் அல்லாமல் தனது உருவத்தையும் மாற்றிக் கொள்ளக்கூடியவர். இப்போது தங்கலான் படத்திற்காக விக்ரம் கடுமையான உழைப்பை போட்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு தங்கலான் படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சீயான் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விக்ரமின் ஆரம்பகால படங்களில் மிகவும் முக்கியமானவை சேது, தில், தூள் போன்ற படங்கள் இடம்பெறும்.
அந்த வகையில் தில் மற்றும் தூள் படங்களை இயக்கியவர் தான் தரணி. இவர் தூள் படத்தின் கதையை தளபதி விஜய் இடம் கூறி இருக்கிறார். அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த விஜய் தரணி படத்தில் நடிக்க சில காரணங்களினால் தவிர்த்து உள்ளார்.
தூள் படத்தை நழுவவிட்ட விஜய்
இதனால் தரணி மீண்டும் விக்ரமை வைத்து தூள் படத்தை இயக்குகிறார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் மீண்டும் தரணியை நழுவ விட்டு விடக்கூடாது என விஜய் தனது அடுத்த படத்தில் உடனடியாகவே புக் செய்தார்.
அவ்வாறு உருவானது தான் கில்லி என்ற வெற்றி கூட்டணி. இந்தப் படத்திற்கு பக்கவாக அமைந்தவர்கள் தான் பிரகாஷ் ராஜ் மற்றும் திரிஷா. இன்றளவும் பிரகாஷ்ராஜின் முத்துப்பாண்டி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கிறது.
அதோடு கில்லி படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இப்போது திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரீ ரிலீஸில் முதல் நாளே கில்லி படம் 10 கோடி வசூல் செய்திருக்கிறது.