கோலிவுட்டில் மீடியம் பட்ஜெட் நடிகராக தன் பயணத்தை ஆரம்பித்து இன்று பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் அந்த பிரபல நடிகர். சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த நடிகரின் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
இதைப் பார்த்த அந்த மாஸ் நடிகரின் ரசிகர்கள் தற்போது இவரின் படத்தை பற்றி பல நெகட்டிவ் கமெண்ட்டுகளை சோஷியல் மீடியாவில் பரவவிட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர் மாஸ் நடிகருக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று பயந்த ரசிகர்கள் அவரை வெறுப்புடன் பார்த்து வந்தனர்.
மேலும் நடிகரின் திரைப்படங்களில் டாப் நடிகர் மற்றும் சூப்பர் நடிகரின் ரெஃபரன்ஸ்களை அதிகமாக பயன்படுத்தி வந்ததும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் தற்போது வெளியாகியிருக்கும் அந்த படத்தை ஓட விடக்கூடாது என்ற நோக்கில் கருத்துக்களை பரப்புவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அது எதுவும் வேலைக்காகாமல் தற்போது அந்த படம் வசூலில் அனைவரையும் மிரள வைத்துள்ளது. இதை பார்த்து மாஸ் நடிகரின் ரசிகர்கள் தற்போது பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள். எங்கு அவர் மாஸ் நடிகரை ஓவர்டேக் செய்து போய்விடுவாரோ என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறதாம்.
ஆனால் எத்தனை நடிகர்கள் வந்தாலும் நடிகரின் இடத்தை நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் தங்களுக்கு தானே ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்களுக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது. இதை மாஸ் நடிகரின் ரசிகர்கள் புரிந்து கொண்டால் பிரச்சனைக்கே வேலை இல்லை என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.