வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரோலெக்ஸ்க்கு ரெடியான மாஸ் ஸ்டோரி.. அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

சூர்யா-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான திட்டமிடுதலில் மும்முரமாக இறங்கி இறக்கிறார்.

இதற்காக சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலத்திற்கு விலகுவதாக அறிந்திருந்தார். லோகேஷ் அடுத்து தளபதி 67 பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மன்சூர் அலி கானை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து சூர்யாக்காக ஒரு கதை ரெடியாக இருப்பதாக அதிரடியான ட்விஸ்டை சொல்லி இருக்கிறார். லோகேஷ், சூர்யாவுக்கு ரோலெக்ஸ் என்னும் அதிரடியான கேமியோ ரோலை கொடுத்துள்ளார்.

இந்த படம் சூர்யாக்கு அடுத்து ஒரு பரிமாணத்தை தந்து இருக்கிறது. சூர்யாவும் லோகேஷ் கனகராஜும் கடந்த ஐந்து வருடங்களாகவே பல கதைகளை விவாதித்து வந்திருக்கின்றனர், இயக்குனர் சூர்யாக்காக ஒரு கதையும் எழுதி வைத்திருக்கிறாராம். அந்த கதையின் பெயர் ‘இரும்புக்கை மாயாவி’.

லோகேஷ்-சூர்யா எப்போது கதை விவாதத்தில் ஈடுபட்டாலும் சூர்யா எப்போது ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் பண்ணலாம் என்றே கேட்டு கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சூர்யாக்காக எழுதப்பட்ட கதையில் அவரை வைத்தே இயக்குவேன் என்று லோகேஷ் கனகராஜ், சூர்யாவின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக சூர்யாவை வைத்து பிரம்மாண்ட ஒரு வெற்றிப் படத்தை லோகேஷ் கொடுப்பார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. லோகேஷ் தற்போது கோலிவுட் இயக்குனர்களின் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார்.

Trending News