திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மாஸ்டர் பட நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்.. ஸ்கிரீன் ஷாட் எடுத்து கிழித்தெறிந்த சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சௌந்தர்யா நந்தகுமார். விஜய் டிவி சீரியல் , மற்றும் சிறு, சிறு  குறும்படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பேராசிரியராகவும் நடித்திருந்தார்.

இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவரிடம் மதுரையைச் சேர்ந்த ஒருவர் தவறாக பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா நந்தகுமாரிடம், பேராசிரியர் ஒருவர் தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பியது மட்டுமல்லாமல் படுக்கைக்கு அழைத்துள்ளார். இந்த பேராசிரியரிடம் படிக்கும் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சௌந்தர்யா நந்தகுமார் அறிவித்துள்ளார்.

தற்போது அந்தப் பேராசிரியருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்து வருகின்றது. ஒரு பள்ளி ஆசிரியரே இவ்வாறு நடந்துகொண்டால், இந்த சமூகம் எங்கே செல்கிறது என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Soundarya
Soundarya

சௌந்தர்யா நந்தகுமார் இவ்வாறு தைரியமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக்குரிய விஷயம் என்று திரைப் பிரபலங்கள் கூறிவருகின்றனர்.

Trending News